விதிமீறல் காரணமாக உணவகம் மூடல்

விதிமீறல் காரணமாக உணவகம் மூடல்

1 mins read
3d594275-3c72-4529-9983-0e34dfaa70a4
-

லாேராங் மம்போங்கில் செயல்பட்டு வந்த 'பிரிட்டிஷ் இந்தியன் கறி ஹட்' என்ற உணவகம் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக மூடப்பட்டு உள்ளது. அடுத்த வாரம் முதல் மக்கள் அங்கிருந்து உணவுப்பொருட்களை வாங்கிச் செல்ல மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். அந்த உணவகம் பாதுகாப்பான ஏற்பாடுகளைச் செய்திருப்பதாக தெரியவரும் பட்சத்தில் ஜூன் 29 முதல் அங்கு வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு உண்ண அனுமதிக்கப்படுவார்கள் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்து உள்ளது.

சிங்கப்பூரில் இரண்டாம் கட்ட பொருளியல் தளர்வு நடப்புக்கு வந்த முதல் நாளன்று லாேராங் மம்போங் சாலையிலும் அங்குள்ள தெருவோரக் கடைகளிலும் கூட்டம் அதிகமாகத் திரண்டிருந்ததை அதிகாரிகள் கண்டனர். வீதியில் மக்கள் கூடுவதைத் தடுக்கும் வகையில் லாேராங் மம்போங் போக்குவரத்துக்கு மீண்டும் திறந்துவிடப்படும்.

சாைலேயார நடைபாதைக் கடைகள் அகற்றப்படும் என்று ஆணையம் கூறியது. அந்தப் பகுதியில் உள்ள உணவு, பான கடைகள் எல்லாம் தங்கள் கட்டடங்களுக்கு உள்ளே அமர்ந்து வாடிக்கையாளர்கள் சாப்பிடுவதையும் குப்பை ேபாடாமல் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். 2ஆம் கட்ட பொருளியல் தளர்வு நடப்பில் இருந்தாலும் கொவிட்-19 பரவலைத் தடுக்க ஒவ்வொருவரும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியது.