புக்கிட் பாத்தோக்கில் மீண்டும் களமிறங்கும் சீ சூன் ஜுவான்

புக்கிட் பாத்தோக்கில் மீண்டும் களமிறங்கும் சீ சூன் ஜுவான்

2 mins read
840f9bc9-1393-493a-9e4f-16add77fe08c
சிங்­கப்­பூர் ஜன­நா­ய­கக் கட்­சி­யின் தலை­மைச் செய­லா­ளர் டாக்­டர் சீ சூன் ஜுவான். -

எதிர்­வ­ரும் பொதுத் தேர்­த­லில் புக்­கிட் பாத்­தோக் தனித் தொகு­தி­யில் மீண்­டும் போட்­டி­யிட தயா­ராகி வரு­கி­றார் சிங்­கப்­பூர் ஜன­நா­ய­கக் கட்­சி­யின் தலை­மைச் செய­லா­ளர் டாக்­டர் சீ சூன் ஜுவான். அவர் நேற்றுக் காலை புக்­கிட் பாத்­தோக் வெஸ்ட் சந்­தை­யில் பொது­மக்­க­ளைச் சந்­தித்து துண்­டுப் பிர­சு­ரங்­க­ளைக் கொடுத்­தார். டாக்டர் சீயுடன் இருந்த சக கட்சி உறுப்­பி­னர்­கள் அவரது முகம் அச்­சி­டப்­பட்ட டி-சட்­டை­களை அணிந்­தி­ருந்­த­னர். அதில் 'புக்­கிட் பாத்­தோக்­கிற்கு சீ சூன் ஜுவான்' என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.

ஃபேஸ்புக்­கில் தம் ஆத­ர­வா­ளர்­க­ளு­டன் நேரலையில் பேசிய டாக்­டர் சீ, ''நீங்­கள் விரும்­பி­னா­லும் விரும்­பா­விட்­டா­லும், அடுத்த மூன்று வாரங்­க­ளுக்கு புக்­கிட் பாத்­தோக் என் மலர்ந்த முகத்­தைப் பார்க்­கப் போகிறது,'' என்று கூறி­னார்.

புக்கிட் பாத்தோக் தொகுதிக்கு கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த இடைத்­தேர்­த­லின்போது டாக்டர் சீ, மக்­கள் செயல் கட்சி (மசெக) வேட்­பா­ள­ரான திரு முரளி பிள்­ளையை எதிர்த்­துப் போட்­டி­யிட்டு தோற்­றார். அப்­போது டாக்­டர் சீ 38.8% வாக்­கு­க­ளைப் பெற்­றார்.

புக்­கிட் பாத்­தோக் தனித்­ தொகு­தி­யில் வாக்­க­ளிக்­கக் கூடிய மொத்த குடி­யி­ருப்­பா­ளர்­க­ளின் எண்­ணிக்கை கடந்த ஏப்­ரல் மாத நில­வ­ரப்­படி 29,950ஆக இருந்­தது என தேர்­தல் துறை­யின் புள்­ளி­வி­வ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

வர­வி­ருக்­கும் பொதுத் தேர்­த­லில் சிங்­கப்­பூர் ஜன­நா­ய­கக் கட்சி­யின் சார்­பில் போட்­டி­யி­டும் வேட்­பா­ளர்­கள் குறித்த விவ­ரம் நாளை மறு­நாள் புதன்­கி­ழமை அறி­விக்­கப்­ப­ட­லாம் என எதிர்­பார்க்­கப்­படு­கிறது. அக்­கட்சி, ஹாலந்து-புக்­கிட் தீமா குழுத்­தொ­கு­தி­யி­லும் மார்­சி­லிங் - இயூ டீ குழுத்­தொகு­தி­யி­லும் புக்­கிட் பாத்­தோக், யூஹுவா, புக்­கிட் பாஞ்­சாங் ஆகிய தனித்­ தொகு­தி­க­ளி­லும் போட்­டி­யி­டும் என நம்­பப்­ப­டு­கிறது.