புக்கிட் பாத்தோக் வட்டாரத்திலுள்ள காப்பிக் கடை ஒன்றில் கைகலப்பு மூண்டதை அடுத்து மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 11லுள்ள புளோக் 157ல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த இந்தச் சம்பவத்தின் காணொளியை ஸ்டாம் செய்தித்தளம் வெளியிட்டது.
இந்தக் கைக்கலப்பில் போத்தல்களும் கண்ணாடிக் குவளைகளும் வீசப்பட்டதை அந்த 30 விநாடி காணொளி காட்டுகிறது.
கைது செய்யப்பட்ட ஆடவர்கள் 48 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று போலிசார் தெரிவத்தார். விசாரணை தொடர்கிறது.

