அனைத்து மின்னியல் சாலைக் கட்டண (இஆர்பி) நுழைவாயில்களிலும் அடுத்த மாதம் 26ஆம் தேதி வரை கட்டணம் வசூலிக்கப்படாது என நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 6ஆம் தேதியில் இருந்து இஆர்பி கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஜூலை நான்காம் வாரத்தில் இடம்பெறும் அடுத்த மறுஆய்வுக் கூட்டத்தில் இஆர்பி கட்டண ரத்து நீடிக்குமா அல்லது புதிய கட்டணம் அறிவிக்கப்படுமா என்பது பற்றி முடிவெடுக்கப் படும். ஏப்ரல், மே மாதங்களில் போக்குவரத்து சராசரியாக 60 விழுக்காடும் விபத்துகள் 40 விழுக்காட்டிற்கு மேலும் குறைந்தன.
ஜூலை 26 வரை 'இஆர்பி' இல்லை
1 mins read
படம்: எஸ்டி, ஜின் தே -

