இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் சமூக உண்டியல் நிதிக்கும் அரசாங்கத்தின் Giving.sg இணையத்தளம் வழியாகவும் சிங்கப்பூரர்கள் $90 மில்லியன் நன்கொடை வழங்கியிருக்கின்றனர்.
இந்தத் தொகை, கடந்த ஆண்டில் பெறப்பட்ட ஒட்டுமொத்த நன்கொடைக்கு நிகரானது என்று கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் நேற்று ஒரு கூட்டறிக்கை மூலமாகத் தெரிவித்தன.
அத்துடன், 2020 ஜனவரி முதல் மே மாதம் வரை Giving.sg இணையத்தளம் வழியாக 13,300க்கும் மேற்பட்டோர் தொண்டூழியம் புரிய தங்களது பெயர்களைப் பதிவுசெய்தனர். கொரோனா கிருமிப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்தபோது தொண்டூழியம் புரிவதற்கான வாய்ப்புகள் குறைந்தபோதும் இந்த ஏற்றம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 11,300ஆக இருந்தது.

