பாட்டாளிக் கட்சி சார்பில் 12 உத்தேச வேட்பாளர்கள்

கட்சி வெளியிட்ட காணொளியில் ஐந்து புதுமுகங்கள்

எதிர்க்­கட்­சி­யான பாட்­டா­ளிக் கட்சி நேற்று ஒரு காணொ­ளியை இணை­யத்­தில் வெளி­யிட்­டது. பொதுத் தேர்­த­லில் வேட்­பா­ளர்­க­ளா­கக் கள­மி­றக்­கும் வாய்ப்­புள்ள 12 பேர் அந்­தக் காணொ­ளி­யில் அறி­மு­கம் செய்­யப்­பட்­ட­னர்.

‘மேக் யுவர் வோட் கவுன்ட்’ என்­னும் தலைப்­பி­லான அந்த ஆறு நிமிட காணொ­ளி­யில் அல்­ஜு­னிட் குழுத்­தொ­குதி உறுப்­பி­னர்­க­ளான சில்­வியா லிம், பிரித்­தம் சிங் ஆகி­யோ­ரு­டன் தொகு­தி­யில்லா நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் டென்­னிஸ் டான், லியோன் பெரேரா போன்­றோ­ரும் இடம்­பெற்றுள்­ள­னர்.

கட்­சி­யின் முன்­னைய தலை­மைச் செய­லா­ள­ரான லோ தியா கியாங்­கின் முகம் காணப்­பட்­ட­ போ­தி­லும் அவர் எது­வும் பேச­வில்லை. தமது வீட்­டில் கீழே விழுந்­த­தால் காய­முற்ற அவர் கூ தெக் புவாட் மருத்­து­வ­ம­னை­யில் தீவிர சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பி உள்­ளார். காணொ­ளி­யில் காணப்­பட்ட மற்ற உறுப்­பி­னர்­கள் கடந்த சில ஆண்­டு­க­ளாக கட்­சி­யு­டன் சேர்ந்து ஆற்­றிய பணி­கள் குறித்து ஒரு­சில வார்த்­தை­கள் பேசி­னர்.

முன்னாள் பொங்­கோல் ஈஸ்ட் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லீ லி லியன், 41, 2015 பொதுத் தேர்­த­லில் நீ சூன் குழுத் தொகு­தி­யில் போட்­டி­யிட்ட அணி­யைச் சேர்ந்த செரில் லோ, கென்­னத் ஃபூ, 43, ஆகி­யோ­ரும் காணொ­ளி­யில் இடம்­பெற்று உள்­ள­னர்.

இப்­பொ­துத் தேர்­த­லில் போட்­டி­யி­டும் வாய்ப்பை இவர்­கள் பெறக்­கூ­டும். ஐந்து புது­மு­கங்­களும் இந்த காணொ­ளி­யில் காணப்­பட்­ட­னர்.

அவர்­களில் ஒரு­வ­ரான ரீசா கான், 27, என்­ப­வர் 2017 அதி­பர் தேர்­த­லில் போட்­டி­யிட ஆர்­வம் காட்­டிய ஃபாரிட் கானின் மகள் ஆவார். ஜேமுஸ் லிம், 44, வழக்­க­றி­ஞர் ஃபாட்லி ஃபாஸி, விளம்­பர நிர்­வாகி நிக்­கோல் சீ, 33, சுற்­றுச்­

சூ­ழல் நிபு­ணர் யுதிஷ்த்ரா நாதன் ஆகி­யோர் மற்­ற­வர்­கள். இவர்­களில் நிக்­கோல் சீ, 2011 பொதுத் தேர்­த­லில் தேசிய ஒரு­மைப்­பாட்­டுக் கட்­சி­யின் வேட்­பா­ள­ரா­கக் களம் கண்­ட­வர். இந்த ஐவ­ரும் பாட்­டா­ளிக் கட்­சி­யின் வேட்­பா­ளர்­கள் என முறைப்­படி அறி­விக்­கப்­ப­டா­விட்­டா­லும் கட்­சி­யின் பல நட­வ­டிக்­கை­களில் கலந்­து­கொண்­ட­வர்­கள்.

காணொ­ளியை வெளி­யி­டும் முன் நேற்று முன்­தி­னம் மாலை 15 விநா­டி­கள் ஓடக்­கூ­டிய விளம்­பர படச்­சு­ருள் ஒன்றை சமூக ஊட­கங்­களில் அக்­கட்சி பதி­வேற்­றி­யது.