சிஜகவுக்கு போலிஸ் அனுமதி மறுப்பு

சிங்­கப்­பூர் ஜன­நா­ய­கக் கட்சி (சிஜக) இவ்­வார இறு­தி­யில் நிதி திரட்­ட அனுமதிக்கக் கோரிய விண்ணப்பத்தை போலிஸ் நிராகரித்துவிட்­டது. அந்­நி­கழ்வு கூட்­டத்­தி­னரை ஈர்க்­கக்­கூ­டும் என்­ப­தா­லும் பொது சுகா­தா­ரம் மற்­றும் பாது­காப்­பைக் கருத்­தில் கொண்­டும் போலிஸ் அனுமதி மறுத்துள்ளது. இதனை சிஜக தலை­மைச் செய­லா­ளர் சீ சூன் ஜுவான் நேற்று தமது ஃபேஸ்புக்­கில் தெரி­வித்­தார்.