மும்முனை போட்டியை தவிர்க்க வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் களமிறங்காத கட்சி

வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகு­தி­யில் மும்­மு­னைப் போட்­டி­யைத் தவிர்க்­கும் நோக்­கில் சீர்­தி­ருத்­தக் கட்சி அங்கு போட்­டி­யி­டாது என்று அக்­கட்­சி­யின் தலை­மைச் செய­லா­ளர் கென்­னத் ஜெய­ரத்­னம் தெரி­வித்து உள்­ளார்.

அந்­தக் குழுத் தொகு­தி­யில் ஏற்­கெ­னவே மக்­கள் செயல் கட்­சியை எதிர்த்து சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்சி (சிமுக) போட்­டி­யி­டு­வ­தால் நேர­டிப் போட்­டிக்கு வழி­விட தமது கட்சி முடி­வெ­டுத்­தி­ருப்­ப­தாக செவ்­வாய்க்­கி­ழமை இரவு அவர் தமது ஃபேஸ்புக்­கில் தெரி­வித்­தார்.

முன்­ன­தாக, போட்­டி­யி­லி­ருந்து வில­கு­வது குறித்து சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்­சி­யின் தலை­மைச் செய­லா­ளர் டாக்­டர் டான் செங் போக், உதவி தலை­மைச் செய­லா­ளர் லியோங் முன் வேய் ஆகி­யோ­ரு­டன் நீண்ட பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­ட­தா­க­வும் திரு கென்­னத் குறிப்­பிட்டு உள்­ளார்.

இந்­தத் தேர்­த­லில் எதிர்க்­கட்­சி­கள் ஒன்­றி­ணைந்து செயல்­ப­டு­வ­தும் வெற்றி வாய்ப்­புள்ள இடங்­களில் அவை ஒவ்­வொன்­றும் போட்­டி­யி­டும் வாய்ப்­பைப் பெற வேண்­டும் என்­றும் அவர் தெரி­வித்து உள்­ளார்.

“சிமுக தலை­வர்­க­ளு­டன் பேசிய விவ­ரத்தை நான் வெளி­யிட விரும்­ப­வில்லை. இருப்­பி­னும் திட்­ட­மிட்­ட­தைக் காட்­டி­லும் அந்தக் கட்சி குறை­வான இடங்­க­ளி­லேயே போட்­டி­யிட உள்­ளது.

“மும்­மு­னைப் போட்­டி­யைத் தவிர்ப்­ப­தற்­காக பல தொகு­தி­களில் போட்­டி­யி­டும் திட்­டத்தை அது மீட்­டுக்­கொண்­டுள்­ளது.

“அதற்­குக் கைமா­றாக நாங்­களும் வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகு­தியை விட்­டுக்­கொ­டுத்து உள்­ளோம்,” என்று திரு கென்­னத் குறிப்­பிட்­டுள்­ளார்.

வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகு­தி­யு­டன் தமது கட்­சிக்கு உணர்­வு­பூர்­வ­மான தொடர்பு இருப்­ப­தாக அவர் தெரி­வித்­துள்­ளார்.

அந்­தத் தொகு­தி­யி­லி­ருந்து வெளி­யே­றும் அதே சம­யம் அங் மோ கியோ குழுத் தொகு­தி­யி­லும் இயோ சூ காங், ராடின் மாஸ் ஆகிய இரு தனித் தொகு­தி­க­ளி­லும் சீர்­தி­ருத்­தக் கட்சி இத்­தேர்­த­லில் போட்­டி­யி­டும் என்­றும் திரு கென்­னத் கூறி­யுள்­ளார்.

வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி யில் சீர்திருத்தக் கட்சி 2011, 2015 ஆகிய இரு தேர்தல்களில் களமிறங் கினாலும் வெற்றி வாய்ப்பை அக் கட்சியால் பெற இயலவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!