பெரும்பாலான நிறுவனங்கள் நியாயமாக நடந்துகொண்டுள்ளன

பெரும்பாலான நிறுவனங்கள் நியாயமாக நடந்துகொண்டுள்ளன

2 mins read
6634f628-15a5-4fed-9bb7-3ac64030fe61
சீனாவிலிருந்து சிங்கப்பூர் திரும்ப அனுமதி வழங்கப்படாத நிலையிலும் சிங்கப்பூர் திரும்பிய சீனாவைச் சேர்ந்த இரண்டு ஊழியர்களின் வேலை அனுமதி சீட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சம்பளம் தொடர்பாகக் கடந்த மூன்று மாதங்களில் 187,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு நேற்று கூறியது. பெரும்பாலானோர் கொவிட்-19 நெருக் கடியால் பெரிதும் பாதிப்புக்குள்ளான தொழில்துறைகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அதன் அறிக்கையில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இருப்பினும் மார்ச் 12 முதல் கடந்த மூன்று மாத காலமாகச் செலவுகளை மிச்சப்படுத்தும் தங் களின் நடவடிக்கைகள், ஊழியர் களின் மாதாந்திர சம்பளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது தொடர்பில் 4,800க்கும் மேற்பட்ட முதலாளி கள் அமைச்சிடம் தெரிவித்து வருகின்றனர். இல்லப் பணிப்பெண் களைத் தவிர்த்துப் பாதிக்கப்பட்ட ஊழியர்கள், இங்குள்ள ஊழிய ரணியில் ஐந்து விழுக்காட்டினர்.

சில நிறுவனங்கள் தங்களின் செலவுகளை மிச்சப்படுத்தும் நோக்கில் ஊழியர்களது சம்பளங்களைச் சுமார் 25% வரை குறைத்ததாகக் கூறப்படுகிறது. ஹோட்டல் மற்றும் உணவு சேவைத் துறைகளில் ஆக அதிக எண்ணிக்கையான சுமார் 45,000 ஊழியர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டனர். தங்களின் செலவுகளை மிச்சப்படுத்தும் திட்டங்கள் குறித்து மனிதவள அமைச்சுக்குத் தெரிவித்து வரும் நிறுவனங்களில் ஹோட்டல் மற்றும் உணவக முதலாளிகள் 24 விழுக்காட்டினர் எனத் தெரிவிக்கப்பட்டது.

அவ்வகையில் சம்பளம் தொடர்பாகக் கட்டுமான நிறுவனங்களில் சுமார் 25,000 ஊழியர்களும் மொத்த, சில்லறை வியாபார நிறு வனங்களில் சுமார் 19,000 ஊழியர்களும் பாதிப்புக்குள்ளாகினர்.

பத்து அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் ஊழியர்கள் உள்ள நிறுவனங்கள், செலவுகளை மிச்சப்படுத்தும் தங்களின் நட வடிக்கைகளால் ஊழியர்களின் சம்பளத்தில் பாதிப்பு இருந்தால் அதை மனிதவள அமைச்சிடம் தெரிவிக்க வேண்டும்.

அதன்படி சம்பளமில்லா விடுப்பு, மாதாந்திரச் சம்பள விகிதங்களில் மாற்றம், குறைந்த நாட்களுக்கு வேலை போன்றவை நிறுவனங் களால் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட திட்டங்கள் என்று மனிதவள அமைச்சும் நடுநிலையான வேலைவாய்ப்பு நடைமுறைகள் தொடர்பான முத்தரப்புக் கூட்டணியும் தங்களின் கூட்டு அறிக்கையில் தெரிவித்தன.

இந்நிலையில் தங்கள் நிறுவனங் கள் நியாயமற்ற முறையில் நடந்து கொண்டதாகக் கூறி 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அமைச்சின் உதவியை நாடினர். இருப்பினும், எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் தேவை குறித்து ஊழியர், முதலாளிகளுக்கிடையே சரியான புரிந்துணர்வு இல்லாத காரணத்தினால்தான் சுமார் 74% புகார்கள் எழுந்ததாகக் கண்டறியப்பட்டது.

"இருதரப்பினரும் புரிந்துணர்வுடன் சிலவற்றை விட்டுக் கொடுத்து, இணைந்து செயல்பட்டிருந்தால் இந்த நெருக்கடியிலிருந்து நிறுவனம் மீள உதவி புரிந்து பல சச்சரவுகளைத் தவிர்த்திருக் கலாம்," என்றது அமைச்சு.