போதைப்பொருள் தொடர்பிலும் போக்குவரத்து தொடர்பிலும் குற்றங்கள் புரிந்த சந்தேகத்தின் பேரில் 52 வயது கார் ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று செம்பவாங்கில் நடந்த விபத்து ஒன்றில் நான்கு வாகனங்கள் மோதிக்கொண்டன.
விபத்து தொடர்பில் சமூக ஊடகங்களில் வலம் வரும் காணொளி யில் கறுப்பு நிற கார் ஒன்று, போக்குவரத்து விளக்கை மீறிச் சென்று ஒரு நீல நிற காரையும் பேருந்து ஒன்றையும் மோதுவதைக் காண முடிகிறது.
விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பிச் சென்ற ஆடவர் பின்னர் கேன்பரா சாலையில் பிடிபட்டார்.
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது, உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது மற்றும் வாகனத்தின் உரிமையாளரின் அனுமதி இல்லாமல் அவரின் வாகனத்தை ஓட்டியது போன்ற குற்றங்களை அந்த ஆடவர் புரிந்துள்ளதாகக் கூறப் படுகிறது. போலிஸ் விசாரணை தொடர்கிறது.

