ஏழாவது ஆண்டாக முதல் இடத்தில் என்டியு

ஏழாவது ஆண்டாக முதல் இடத்தில் என்டியு

1 mins read
72ef55fe-60c2-44c8-9d80-29dbe6ecf8b5
சிங்கபபூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தலைசிறந்த இளம் பல்கலைக்கழகப் பட்டியலில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தலைசிறந்த இளம் பல்கலைக்கழகப் பட்டியலில் ஏழாவது முறையாக நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு) முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் உலகில் நிறுவப்பட்ட ஆகச் சிறந்த கல்விக் கழகங்களின் பட்டியலில் என்டியு முதலிடத்தைப் பெற்றுள்ளதாக 'குவக்குவரெலி சிமண்ட்ஸ்' நிறுவனம் நேற்று அறிவித்தது.

கல்வி தொடர்பில் நற்பெயர், நிறுவனங்களிடையே நற்பெயர், ஒவ்வோர் ஆசிரியர் தொடர்பான மேற்கோள்கள், ஆசிரியர்-மாணவர் விகிதம், அனைத்துலக ஆசிரியர் களின் எண்ணிக்கை, அனைத்துலக மாணவர்களின் எண்ணிக்கை போன்ற கூறுகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் நிர்ணயிக்கப்படுகிறது.

இருப்பினும் கிருமித்தொற்று சூழலால் உயர்கல்வி வகுப்புகள் தடைப்பட்டுள்ள வேளையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதால் இதுபோன்ற பட்டியல்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு சிலர் கோரியுள்ளனர்.