மருத்துவருக்கு 33 நாட்கள் சிறை தண்டனை

மருத்துவருக்கு 33 நாட்கள் சிறை தண்டனை

1 mins read
dd0019ad-b0d7-4fe0-8105-30225aa5ad60
காவல்துறை அதிகாரிகளை வசைபாடி, தாக்கிய பல் மருத்துவர் ஃபெலிசியா லீ ஸியிங்குக்கு நேற்று 33 நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

குடித்துவிட்டு தகாத வார்த்தைகளால் காவல்துறை அதிகாரிகளை திட்டியது மட்டுமல்லாமல் அவர்களைத் தாக்கிய பல் மருத்துவருக்கு நேற்று 33 நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஃபெலிசியா லீ ஸியிங் கைது செய்யப்பட்டபோது அடங்காமல் அதிகாரிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு அவர் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டார்.