சிங்கப்பூர் ஜனநாயக் கட்சி வரும் தேர்தலில் ஐந்து தொகுதிகளில் மொத்தம் 11 வேட்பாளர்களை நிறுத்த திட்டமிடுகிறது. மார்சிலிங்-இயூ டீ, ஹாலந்து புக்கிட் தீமா குழுத் தொகுதிகள், யூஹுவா, புக்கிட் பாஞ்சாங், புக்கிட் பாத்தோக் ஆகிய தனித் தொகுதிகளை அந்தக் கட்சி குறிவைக்கிறது. மார்சிலிங்- இயூ டீ குழுத் தொகுதியில் போட்டியிடப் போவதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது.
அத்தொகுதிக்கு உட்பட்ட சுவா சூ காங் ஸ்திரீட் 52ல் உள்ள புளோக் 562ல் வசிக்கும் ஒருவருடன் ஜனநாயகக் கட்சி உறுப்பினரான பிரைன் லிம் வியாழக்கிழமை உரையாடினார். கட்சியின் வேறு ஓர் உறுப்பினரும் உடன் இருந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

