செம்பவாங்கில் இரு புதுமுகங்கள்

செம்பவாங்கில் இரு புதுமுகங்கள்

1 mins read
ca5d7824-a93e-4f17-885b-134acad47979
-

செம்பவாங் குழுத்தொகுதியில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி அணியில் இரண்டு மாதர்கள் புதிய வேட்பாளர்களாக களமிறக்கப்படுகிறார்கள்.

சாங்கி விமானநிலையக் குழுமத்தின் முனையம் 5 திட்டத் துறைதுணைத் தலைவியான திருவாட்டி போ லி சான், 44, 'போஸ்டன் கன்சல்டிங் குரூப்' என்ற நிறுவனத்தின் சிங்கப்பூர் நிர்வாக இயக்குநரும் பங்குதாரருமான திருவாட்டி மரியம் ஜஃபார், 43, ஆகியோர் அந்த இருபுதுமுகங்கள்.

கல்வி அமைச்சர் ஓங் யி காங் சனிக்கிழமை வெளியிட்ட காணொளியில் அந்த இரு புதுமுகங்களும் இடம்பெற்று இருந்தனர். இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார். அவருக்குப் பதிலாக திருவாட்டி போ போட்டியிடுவார்.

அதேபோல உள்துறை மற்றும் சுகாதார அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமினுக்கு பதிலாக திருவாட்டி மரியம் களமிறக்கப்படுவார் என்று தெரிகிறது. திரு அம்ரின் அமின் புதிய செங்காங் குழுத்தொகுதியில் மசெக வேட்பாளராகப் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.