சமூக அளவிலான கொரோனா கிருமிப் பரவல் அதிகரித்து வரும்போதிலும் கடற்கரை களுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை கூடி உள்ளது. இந்த வாரயிறுதியில் பலர் தங்கள் குடும்பங்கள், நண்பர்கள் ஆகியோருடன் கடற்கரைக்குச் சென்று நேரத்தைக் கழித்தனர்.
ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரையில் நேற்று முன்தினம் பலர் கடலில் நீந்துவது, பட்டம் விடுவது, ஒன்றாக அமர்ந்து உணவு உண்பது போன்ற நடவடிக்கை களில் ஈடுபட்டு மகிழ்ந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது. இருப்பினும், அவர்கள் கொரோனா கிருமித்தொற்றைத் தவிர்ப்பதற்
காகப் பாதுகாப்பான தூர இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற முன்னெச்
சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

