மறுசுழற்சி செய்தால் வெகுமதி

பயன்படுத்தப்பட்ட போத்தல்களையும் கலன்களையும் மறுசுழற்சி செய்ய விரும்புவோர், தீவு முழுவதும் வைக்கப்பட்டுள்ள ‘மறுசுழற்சி’ விற்பனை இயந்திரங்கள் மூலம் அதைச் செய்ய முடியும். அதற்குக் கைம்மாறாக, அவர்கள் ரொக்கமில்லா வெகுமதியைப் பெறும் முறை நேற்று முதல் நடப்பிற்கு வந்தது.

முன்னதாக, கடந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட சில எதிர் விற்பனை இயந்திரங்கள் மூலம் ஃபேர்பிரைஸ் விலைக்கழிவுச் சீட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன.

வெகுமதிக்காக அல்ல, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமே மறுசுழற்சி செய்ய தங்களை ஊக்குவிப்பதாக உள்ளது என்று பொதுமக்கள் கருத்துரைத்ததை அடுத்து, வெகுமதி மாற்றங்கள் இடம்பெறுவதாக தேசிய சுற்றுப்புற ஆணையம் தெரிவித்தது.

சென்ற அக்டோபர் மாதத்தில் இருந்து 50 எதிர் விற்பனை இயந்திரங்கள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டன. பள்ளிகள், கடைத்தொகுதிகள் என மனிதர்கள் அதிகம் புழங்கும் இடங்களில் இவை வைக்கப்பட்டுள்ளன.

சுற்றுப்புற வாரியமும் ‘எஃப் & என்’ உணவு, பான நிறுவனமும் இணைந்து, ஃபேர்பிரைசின் ஆதரவுடன் மேற்கொண்டு வரும் ‘மறுசுழற்சி செய்வோம், சேமிப்போம்’ என்ற திட்டத்தின் ஓர் அங்கமாக இந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், கேப்பிட்டலேண்ட், ஸ்போர்ட் சிங்கப்பூர், செந்தோசா மேம்பாட்டு நிறுவனம், ‘எனிவீல்’ பகிர்வு மிதிவண்டி நிறுவனம் ஆகியவையும் அந்தத் திட்டத்தின் பங்காளிகளாக இணைந்துள்ளதாக வாரியம் தெரிவித்துள்ளது.

பதினாறு இயந்திரங்கள் வெகுமதியாக விலைக்கழிவுச் சீட்டு வழங்குவதைத் தொடரும். ஒவ்வொரு 20 கலன்களுக்கும் 20 காசு மதிப்புள்ள ஃபேர்பிரைஸ் விலைக்கழிவுச் சீட்டை அந்த இயந்திரங்கள் வழங்கும்.

கடந்த மார்ச் முதல் தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ள ஐந்து இயந்திரங்கள் வெகுமதி எதையும் வழங்காது. சிறுவயதில் இருந்தே மாணவர்களிடம் மறுசுழற்சி செய்யும் பழக்கத்தை வளர்க்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

இதர 29 இயந்திரங்களிலும் ‘ஆக்டிவ்எஸ்ஜி’ தகுதிப்புள்ளிகள், செந்தோசா கேளிக்கை அனுமதி வில்லைகள், ‘எனிவீல்’ பகிர்வு மிதிவண்டியில் இலவச உலா, கேப்பிட்டலேண்டின் ‘ஸ்டார்ஸ்’ தகுதிப் புள்ளிகள் ஆகியவற்றை வெகுமதியாகப் பெற முடியும்.

ஒவ்வொரு பத்து காலி பிளாஸ்டிக் அல்லது அலுமினியக் கலன்களை அந்த இயந்திரத்தில் போட்டு, இவற்றில் ஏதேனும் ஒரு வெகுமதியைப் பெறலாம். புதிய இயந்திரங்களைப் பயன்படுத்துவோர், வெகுமதி எதுவும் வேண்டாம் என்றும் தெரிவுசெய்யலாம்.

“மறுசுழற்சி குறித்து மக்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்த ஆர்வத்தை மேலும் வளர்த்து, அதிகமான குடும்பங்களைச் சென்றடைந்து, மக்கள் மறுசுழற்சியை எளிதாக மேற்கொள்ள ஆவன செய்வோம்,” என்று வாரியம் நம்பிக்கை தெரிவித்தது.

நீடித்து நிலைக்கத்தக்க சிங்கப்பூர் திட்டத்தை முழுமைப்படுத்த வேண்டும் என்ற வாரியத்தின் இலக்கு சார்ந்து இந்த மறுசுழற்சி இயந்திரங்கள் திட்டம் இடம்பெறுகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நீடித்து நிலைக்கத்தக்க சிங்கப்பூர் திட்டமானது, 2030ஆம் ஆண்டிற்குள் சிங்கப்பூரின் தேசிய மறுசுழற்சி விகிதத்தை 70 விழுக்காடாக அதிகரிக்க இலக்கு கொண்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!