சிங்கப்பூரர் மீட்கப்படுவார்; நம்பிக்கையில் குடும்பத்தினர்

சிங்கப்பூரர் மீட்கப்படுவார்; நம்பிக்கையில் குடும்பத்தினர்

1 mins read
1de4a227-7af8-4dc3-bbbd-81818246e644
சென்ற மாதம் 29ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் மேற்குக் கடலோரப் பகுதியில் கோ ஹெங் யி என்ற சிங்கப்பூரர் காணாமல் போன நிலையில், ஆளில்லா வானூர்தி, மோட்டார் படகுகள் மூலம் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. படம்: மேற்கு ஆஸ்திரேலிய போலிஸ் படை -
multi-img1 of 2

ஆஸ்திரேலியாவின் மேற்குக் கடலோரப் பகுதியில் பெரிய அலையால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட திரு கோ ஹெங் யி என்ற சிங்கப்பூர் ஆடவரைத் தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஆனாலும், திரு கோ உயிரோடு திரும்பி வருவார் என தாங்கள் நம்பிக்கையுடன் காத்திருப்பதாக அவரின் தந்தை தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை ஜூன் 29ஆம் தேதி இஞ்சிடப் கடற்கரைப் பகுதியில் ஒரு பாறை மீது நின்றிருந்த 23 வயது மாணவரான திரு கோவை, பெரிய அலை ஒன்று கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது.

போலிஸ் படையினரும் தொண்டூழியர்களும் கடந்த ஐந்து நாட்களுக்கும் மேலாக அவரைத் தேடி வந்த நிலையில், மோசமான கடல் சூழல் காரணமாக அப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியா செல்ல சிறப்பு அனுமதி கிடைத்துள்ளபோதும் திரு கோவின் குடும்பத்தினர் இன்னும் அங்கு செல்லவில்லை. ஏனெனில், கொவிட்-19 நோய்ப் பரவல் காரணமாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழையும் வெளிநாட்டவர்கள் 14 நாட்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற விதி நடைமுறையில் இருக்கிறது.

இந்நிலையில், கருணை அடிப்படையில் அந்த விதியிலிருந்து திரு கோவின் குடும்பத்தாருக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கோரிக்கை இன்னும் நிலுவையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.