சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் காலமானார்

1 mins read
2ba0de9a-ad93-4990-8fa0-2ced8b5a2b18
திரு எஸ். வீராசாமி (படம்) நேற்று முன்தினம் காலமாகி விட்டார். இவருக்கு வயது 81. -

சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தில் வெவ்வேறு காலங்களில் செயலவை உறுப்பினராகவும் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் மதிக்கத்தக்கத் தலைவராகவும் செயல்பட்ட திரு எஸ். வீராசாமி (படம்) நேற்று முன்தினம் காலமாகி விட்டார். இவருக்கு வயது 81.

"சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் முக்கிய தூண்களில் ஒருவராகத் திகழ்ந்த திரு வீராசாமி, ஆசிரியர்களின் நலனுக்காகவும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்டவர்.

"பதவி ஓய்வு பெற்ற பிறகும் சங்கத்தில் நிர்வாகச் செயலாளராகப் பணியாற்றினார். அப்போதும் செயலவைக்கு வழிகாட்டியாகவும் செயல்பட்டார்," என்று கருத்துரைத்தார் சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் தற்போதைய தலைவரான 73 வயது திரு சி. சாமிக்கண்ணு.

சிங்கப்பூரில் 1995, 1997ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்மொழி வார ஏற்பாட்டுக் குழுவின் ஆலோசகராகவும் இருந்து அந்தவிழாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் திரு வீராசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

திரு வீராசாமியின் நல்லுடலுக்கு நேற்று தமிழாசிரியர்கள் பலர் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை மண்டாய் தகனச்சாலையில் அன்னாரின் நல்லுடல் தகனம் செய்யப்பட்டது என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.