இரண்டாவது சேர்க்கை நடவடிக்கை மூலம் கூடுதலாக 2,000 இடங்கள்

வெளிநாடுகளுக்குச் சென்று உயர்கல்வி கற்க எண்ணி இருந்த சிங்கப்பூரர்களின் திட்டங்களுக்கு கொவிட்-19 நோய்ப் பரவல் இடையூறு விளைவித்துவிட்டது. இதை அடுத்து, அவர்களுக்கு உதவும் விதமாக இங்குள்ள ஆறு தன்னாட்சிப் பல்கலைக்கழகங்கள் இரண்டாவது சேர்க்கை நடவடிக்கை மூலம் கூடுதலாக 2,000 இடங்களை வழங்கி இருக்கின்றன.

பல்வேறு பாடப்பிரிவுகளில் அந்தக் கூடுதல் இடங்கள் வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்ட கல்வி அமைச்சு, அதே வேளையில் சேர்க்கைத் தரங்கள் கட்டிக்காக்கப் பட்டதாகவும் கூறியது. கடந்த மே மாதம் இடம்பெற்ற இரண்டாவது சேர்க்கை நடவடிக்கைக்கு ஆறு உள்ளூர் பல்கலைக்கழகங்களுக்கும் 19 முதல் 550 வரையிலான விண்ணப்பங்கள் வந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சென்ற மாதம் செய்தி வெளியிட்டு இருந்தது.