95 வயது மூதாட்டி கொலை; 34 வயது பெண் கைது

அப்பர் சிராங்கூனில் 95 வயது மூதாட்டி ஒருவரைக் கொன்றதன்பேரில் 34 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

ரெக்ரியேஷன் ரோட்டிலுள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் ஒரு மாது கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குறித்து பிற்பகல் 1.50 மணிக்கு போலிசாருக்குத் தெரிவிக்கப்பட்டது.  சம்பவ இடத்தில்  அசைவின்றி தரையில் காணப்பட்ட அந்த 95 வயது மாது இறந்துவிட்டதாக மருத்துவ உதவியாளர் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தை போலிசார் கொலை என வகைப்படுத்தியுள்ளனர். 

இறந்தவரும் கொலைக்குற்றம் சாட்டப்பட்டவரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்கள் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகள் காட்டுகின்றன. சந்தேக நபர் நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon