‘ஜோகூர் பாரு-சிங்கப்பூர் ரயில் திட்டம் நவம்பரில் தொடங்கும்

ஜோகூர் பாரு: மலேசியாவின்  ஜோகூரையும் சிங்கப்பூரையும் இணைக்கும் புதிய ரயில் திட்டத்தின் பணிகள் நவம்பர் மாதத்தில் தொடங்கும் என்று ஜோகூர் முதல்வர் ஹஸ்னி முகமது நம்பிக்கை தெரிவித்துள்ளார் .

மலேசியாவும் சிங்கப்பூரும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று கூறிய அவர், ஜோகூர் பாருவில் உள்ள புக்கிட் சாகரையும் சிங்கப்பூரில் தாம்சன்-ஈஸ்ட் கோஸ் திட்டத்தில் அமைந்துள்ள உட்லண்ட்ஸ் நார்த் ரயில் நிலையத்தையும் திட்டம் இணைக்கும் என்றார் .

“நீண்ட காலமாக காத்திருந்த ரயில் திட்டம் ஜோகூர் பாருவின் பொருளியலை மேம்படுத்தும். அதன் மூலம் இஸ்கந்தர் மலேசியாவும் பயனடையும்,” என்று அவர் குறிப்பிட்டார் . திரு ஹஸ்னி முகமது இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

ரயில்களைப் பராமரிப்பதற்கான பணிமனை ஜோகூர்பாருவில் உள்ள வடிஹானாவில் அமையும். ஆரம்பத்தில் சிங்கப்பூரில் உள்ள மண்டாயில் பணிமனையைக் கட்ட திட்டமிடப்பட்டிருந்தது. ரயில் பணிமனை 2.83 ஹெ க்டர் பரப்பளவில் கட்டப்ப டும். இதனால் உள்ளூர்காரர்களுக்கு 400 முதல் 500
வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றார் அவர்.