ஆயிரக்கணக்கில் தூக்க மாத்திரைகளை  கொடுத்த மருத்துவர் இடைநீக்கம்

ஆறு நோயாளிகளுக்கு தகுந்த மருத்துவப் பராமரிப்பு அளிக்காமலும் அவர்களை நிபுணத்துவ மருத்துவரிடம் பரிந்துரைக்காமலும் அவர்களுக்கு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கில் தூக்க மாத்திரைகளைக் கொடுத்த தனியார் மருத்துவர் ஒருவர் இடைநீக்கம் 22 மாதங்களுக்கு செய்யப்பட்டுள்ளார்.

தெம்ப னிஸ் ஸ்திரீட் 21, புளோக் 201Bல் உள்ள ‘யுனைடெ ட் மெ டிக்கல் பிரக்டிஷனர்ஸ்’ எனும் மருந்தகத்தில் பணியாற்றிய டாக்டர் டா ன் ஜூங் பியாங் எனும் அந்த மருத்துவர் தூக்க மாத்திரைகளை கொடுத்த நோயாளிகள் பற்றிய முறையான குறிப்புகளையும் அவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை விவரங்களையும் வை த்திருக்கவில்லை . அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை அவர் தம்மிடம் வந்த நோயாளிகளுக்கு வழங்கியுள்ளார் என்று
சுகாதார அமைச்சு சிங்கப்பூர் மருத்துவ மன்றத்திடம் 2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தெரிவித்தது.

அதன் தொடர்பில் டாக்டர் டானுக்கு எதிரான புகாரை சிங்கப்பூர் மருத்துவ மன்றம் தன து ஒழுங்குக் குழுவிடம் அதே ஆண்டு டிசம்ப ர் 21ஆம் தேதி தெரிவித்தது.
38 ஆண்டுகளாக மருத்துவத் தொழில் புரிந்துவரும் டாக்டர் டா னுக்கு 33 மாதங்கள் இடைநீக்கம் வழங்கப்பட வேண்டும் என்று மருத்துவ மன்றம் முடிவெடுத்தாலும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தாமதமானதால், அவரது தண்டனைக் காலத்தைக் குறைத்து 22 மாதங்கள் ஆக்கியது. தம் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை டாக்டர் டான் ஒப்புக்கொண்டார்.