வெளிநாடுகளில் இருந்து திரும்பும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற மாணவர்கள், உயர்நிலைப் பள்ளி அல்லது தொடக்கக்கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்ப நடவடிக்கை இன்று தொடங்கு கிறது.
ஆண்டுதோறும் ஆண்டிறுதியில் நடைபெறும் இந்நட வடிக்கையில் விண்ணப்பம் செய்தவர்களுக்கு ஒருமுகப்படுத்தப்பட்ட தேர்வுகள் நடத்தப்படும்.
உயர்நிலை 1 முதல் 3ஆம் வகுப்புகளுக்கான தேர்வு செப்டம்பர் 22-செப்டம்பர் 24 வரையிலும் தொடக்கக்கல்லூரி முதலாண்டுக்கான தேர்வு நவம்பர் 12ஆம் தேதியும் நடைபெறும். உயர்நிலை 4, தொடக்கக் கல்லூரி இரண்டாம் ஆண்டு வகுப்புகளில் சேரவிருக்கும் மாணவர்கள் மீண்டும் பள்ளிக் கல்வி முறையில் சேர்வதில்லை என்பதால் அவர்களுக்குத் தேர்வு இல்லை.
மேல் விவரங்களை கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் பெறலாம்- https://www.moe.gov.sg

