கஸ்தூரி கோவிந்தசாமி விடுவிக்கப்பட்டார்

கஸ்தூரி கோவிந்தசாமி விடுவிக்கப்பட்டார்

1 mins read
a7d1520c-6374-485f-9d8a-662394aace30
கஸ்தூரி கோவிந்தசாமி -

சன் பிளாசா கடைத்தொகுதியில் இரு ஆடவர்களை அவதூறாகப் பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட 40 வயது கஸ்தூரி கோவிந்தசாமிக்கு நேற்று நீதிமன்றம் வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை அளித்தது.

இரு துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை கஸ்தூரி ஒப்புக்கொண்டார். ஒன்று பெண் போலிஸ் மீது வன்முறையைப் பயன்படுத்தியது மற்றது கொவிட்-19 (இடைக்கால நடவடிக்கைகள்) சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்தது.

குற்றங்களை ஒப்புக்கொண்ட கஸ்தூரி, ஏற்கெனவே குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு மனநல பிரச்சினை இருப்பதால் அவர் அக்குற்றங்களைச் செய்துள்ளார் எனக்கூறிய அரசு வழக்கறிஞர், அவர் ஏற்கெனவே இரு மாதங்களுக்கும் மேலாக விசாரணைக் காவலில் இருந்ததால், எந்தத் தரப்புக்கும் அக்கறை இருக்காது என்று அவர் மேலும் கூறினார்.