வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம்: மீண்டும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ள சிங்கப்பூரர்கள்

1 mins read
be98be07-e45a-4032-8716-c9709afaa27a
கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தாய்லாந்து, ஜப்பான், சீனா மற்றும் தைவான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து அதிகமான வாடிக்கையாளர்கள் விசாரித்து வருவதாக உள்ளூர் பயண நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

வெளிநாட்டுப் பயணங்களுக்கான தடை நீக்கப்படும்போது வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் அதிகமான பயண நிறுவனங்கள் தள்ளுபடிக் கட்டணத்தில் தொகுப்புப் பயணத் திட்டங்களை அறிமுகப்படுத்தக்கூடும்.

இந்நிலையில், வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் அலெக்ஸ் குக் எச்சரித்துள்ளார்.

எனவே, வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வோர் நோய்த்தொற்றுக்கு ஆளாகாமல் இருப்பதற்கு பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்ளவேண்டும் என்று திரு அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

"வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்திற்கான தடை நீக்கப்பட்டாலும், கொவிட்-19 நோய்த்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்குச் செல்வதை நான் தவிர்ப்பேன். அதே போல, நோய்த்தொற்று குறைவாக உள்ள நாடுகளுக்குச் செல்வதால் கிருமி தொற்றும் வாய்ப்பு குறைவு என்றும் கூறிவிட முடியாது," என்று கூறியுள்ளார் திரு குக்.

"வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, பலரும் கூடும் உணவகங்கள் போன்ற பொது இடங்களில்தான் அதிகமான நேரத்தைச் செலவிட வேண்டி இருக்கும். அப்போது, நம்மைக் கிருமி தொற்ற அதிக வாய்ப்புள்ளது," என்று அவர் குறிப்பிட்டார்.

திரு அலெக்ஸ், தேசிய பல்கலையின் சா சுவீ ஹாக் பொதுச் சுகாதாரப் பள்ளியின் துணைத் தலைவராகப் பதவி வகிக்கிறார்.