மேலும் 193 விடுதிகள் தொற்றில் இருந்து விடுபட்டதாக அறிவிப்பு

கொவிட்-19 கிருமித்தொற்றில் இருந்து மேலும் 193 வெளி நாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் விடுபட்டுவிட்டதாக மனிதவள அமைச்சு நேற்று தெரிவித்தது. அவற்றில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான பிரத்தியேக தங்கும் விடுதி ஒன்று, விடுதிகளாக மாற்றப்பட்ட தொழிலகங்கள் 170, கட்டுமானத் தளங்களில் அமைக்கப்பட்ட தற்காலிகத் தங்குமிடங்கள் 22 எனத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், எட்டு வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் உள்ள தேறிய ஊழியர்களுக்கான 19 புளோக்குகளும் தொற்றில் இருந்து விடுபட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்தம் 818 தங்கும் விடுதிகளும் 19 விடுதிகளைச் சேர்ந்த 59 புளோக்குகளும் தொற்றிலிருந்து விடுபட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல, கிட்டத்தட்ட 215,000 ஊழியர்கள் தொற்றிலிருந்து தேறிவிட்டனர் அல்லது பரிசோதனையில் அவர்களுக்குக் கிருமித்தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!