சிங்கப்பூரர்களின் சமூக உணர்வைப் பாராட்டும் தேசிய தினப் பாடல்

கொவிட்-19 காரணமாக இவ்வாண்டின் தேசிய தினக் கொண்டாட்டத்தை சிங்கப்பூரர்கள் வீட்டில் இருந்தவாறு கொண்டாட இருக்கின்றனர்.

இந்நிலையில், சிங்கப்பூரர்களின் சமூக உணர்வைப் பாராட்டும் வகையில் இவ்வாண்டின் தேசிய தினப் பாடல் இயற்றப்பட்டுள்ளது.

‘Everything I Am’ எனும் தலைப்பு கொண்ட இப்பாடலுக்கு ஜோஷ்வா வான் இசையமைத்து

உள்ளார். பாடலை நேதன் ஹார்டோனா பாடியுள்ளார்.

சிங்கப்பூரர்கள் ஒருவருக்கொருவர் நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும் என்று இப்பாடல்

ஊக்குவிக்கிறது.

இப்பாடல் கடந்த ஆண்டு இயற்றப்பட்டதாகவும் இவ்வாண்டு கொவிட்-19 கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடி இதை மேலும் முக்கியமானதாக்கி உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடலுடன் இசைக் காணொளி ஒன்று ஒளிபரப்பப்படும். இதை உள்ளூர் பட இயக்குநர் ஹ ஷுமிங் இயக்கியுள்ளார்.

இந்தக் காணொளி யூடியுப்

பிலும் தேசிய தின அணிவகுப்பு இணையத்தளத்திலும் நேற்று வெளியிடப்பட்டது.

சிங்கப்பூரர்களின் வாழ்க்கைக் கதைகள் தம்மை இக்காணொளியைத் தயாரிக்க தூண்டியதாக திரு ஹ தெரிவித்தார்.

சிங்கப்பூரர்கள் ஒன்றிணைந்து செயல்பட ஊக்குவிக்கும் ஒரு காணொளியை இயக்க விரும்பியதாக அவர் கூறினார்.

“காணொளியில் வரும் கதைளைப் பார்த்து சிங்கப்பூரர்கள் கூடுதல் முனைப்புடன் சிங்கப்பூரின் வளர்ச்சிக்குப் பங்காற்ற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

“பல சவால்களை நாம் எதிர்கொண்டு அவற்றை முறியடித்துள்ளோம். அதேபோல இனி வரும் சவால்களையும் நம்மால் முறியடிக்க முடியும் என்பதை இக்காணொளி மூலம் சிங்கப்பூரர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்,” என்று இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பு ஏற்பாட்டுக் குழுத் தலைவர்

பிரிஜேடியர் ஜெனரல் ஃபிரேடரிக் சூ தெரிவித்தார்.

கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் பங்காற்றியவர்கள், உதவி தேவைப்படுவோருக்கு உதவி செய்தோர் ஆகியோர்

பற்றிய 55 உண்மைக் கதைகள் இவ்வாண்டு தேசிய தினக் கொண்டாட்டத்தில் இடம்பெறும்.

வீட்டில் இருக்கும் சிங்கப்பூரர்கள் இணைந்து பங்கெடுக்கும் அங்கங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஒருமைப்பாட்டைக் காட்ட இவற்றில் பங்கேற்க சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய தினத்தன்று காலையில் பாடாங்கில் அதிபர் ஹலிமா யாக்கோப் தலைமையில் தேசிய கீதம் பாடப்படுவதும் அவற்றில் ஒன்று.

அப்போது நாடெங்கும் பல இடங்களில், மருத்துவமனை ஒன்று உட்பட கொடியேற்று விழா நடத்தப்படும். இவை அனைத்தும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்படும்.

தேசிய பற்றுறுதி இரவு 8.20 மணி அளவில் எடுத்துக்

கொள்ளப்படும் என்று பிரிஜேடியர் ஜெனரல் சூ தெரிவித்தார்.

இவ்வாண்டின் தேசிய தினக் கொண்டாட்டம் மற்ற ஆண்டு

களைக் காட்டிலும் வித்தியாசமாக இருக்கும் என்று குறிப்பிட்ட பிரிஜேடியர் ஜெனரல் சூ, அது

சிங்கப்பூரர்களை ஒன்றிணைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

கொவிட்-19 நெருக்கடியைக் கடந்து சிங்கப்பூரின் எதிர்காலம் பற்றி சிங்கப்பூரர்களை இவ்வாண்டின் தேசிய தினக் கொண்டாட்டம் நினைக்கவைக்கும் என்று அவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!