புதிய வடிவில் வரவுள்ள மரினா பே மிதக்கும் மேடை

மறுமேம்பாடு காணவுள்ள மரினா பே மிதக்கும் மேடை, ஒரு நீர் விளையாட்டு மையத்தையும் தேசிய சேவை கருப்பொருள் கொண்ட காட்சியகம் ஒன்றையும் கொண்டு அமைக்கப்படவுள்ளது.

இவ்விடத்தை பெருமளவிலான தேசிய நிகழ்வுகளுக்குரிய நிரந்தர இடமாக மாற்றும் திட்டம் ‘வோஹா ஆர்கிடெக்ஸ்’ தலைமையிலான ஆலோசகர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

‘என்எஸ் ஸ்குவேர்’ என்ற இத்திட்டத்திற்கான பணிகள் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி 2025ஆம் ஆண்டில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தொடர்பில் நேற்று தேசிய வளர்ச்சி அமைச்சும் தற்காப்பு அமைச்சும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன.

“சிங்கப்பூரின் நீண்டகால நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களில் ஒரு முக்கிய பகுதி, வாழ்வதற்குரிய, மக்களை மையமாகக் கொண்ட நகரத்தை அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் உருவாக்கித் தருவதே. இதைக் கருத்தில் கொண்டு மரினா பே மிதக்கும் மேடையின் மறுமேம்பாடு அமைந்திடும். நகர மையத்தின் துடிப்பை மெருகூட்டுவதுடன் சமூக ஒன்றுகூடலுக்கு ஏற்ற இடங்கள் அமைக்கப்படும்,” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

புதிய தேசிய விளையாட்டரங்கத்தைக் கட்டி முடிக்கும் வரை தேசிய தின அணிவகுப்பு நடைபெறும் தற்காலிக இடமாக இந்த மிதக்கும் மேடை கட்டப்பட்டது.

கிட்டத்தட்ட 27,000 பேர் அமரக்கூடிய இவ்விடத்தில் தேசிய தின அணிவகுப்பு 9 ஆண்டுகள் நடைபெற்றுள்ளன.

புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள், ‘ரிவர் ஹாங்பாவ்’, அடிப்படை ராணுவப் பயிற்சித் தேர்ச்சி அணிவகுப்பு போன்ற பற்பல நிகழ்வு களுக்கு இவ்விடம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இடிக்கப்படுவதற்கு முன்பாக இன்னும் இரண்டு முறை தேசிய தின அணிவகுப்பு இங்கு நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் கொவிட்-19 கட்டுப்பாடுகளால் இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பு வெவ்வேறு இடங்களில் நடைபெறத் திட்ட மிடப்பட்டுள்ளது.

இனி மறுமேம்பாடு காணவுள்ள இப்பகுதியில் நீச்சல் குளம் போன்ற சமூக விளையாட்டு வசதிகள் அமைந்திடும் என்று கூறப்பட்டது.

அத்துடன் பொதுமக்களின் இணைப்பை மேம்படுத்த மரினா பே வட்டாரத்தைச் சுற்றி நடைபாதை அமையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தேசிய சேவையாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அதன் கருப்பொருளில் அமைந்த காட்சியகம் இருந்திடும் என்றும் கூறப்ட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!