கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சென்ற இடங்களின் பட்டியலில் தேக்கா நிலையம், முஸ்தஃபா நிலையம், சிம் லிம் ஸ்குவேர்

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சென்ற இடங்களின் பட்டியலில் தேக்கா நிலையம், முஸ்தஃபா நிலையம், சிம் லிம் ஸ்குவேர்

1 mins read
ecac7c2f-87c5-44e7-b155-57f346d81429
முழுமையான பட்டியலை சுகாதார அமைச்சின் இணையப்பக்கத்தில் காணலாம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

தேக்கா நிலையம், சிம் லிம் ஸ்குவேர், முஸ்தஃபா சென்டர், ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவின் சூதாட்டக்கூடம், உபியில் இருக்கும் போக்குவரத்து போலிஸ் தலைமையகம், செம்பவாங் ஷாப்பிங் சென்டரில் உள்ள மாஸ்டர் புராட்டா, புக்கிட் பாத்தோக் ஈஸ்டில் இருக்கும் ஜயன்ட் எக்ஸ்பிரஸ் கடை ஆகிய இடங்களுக்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் (கிருமித்தொற்றைப் பரப்பும் நிலையில் இருந்தவர்கள்) சென்று வந்ததாக சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்கள் 30 நிமிடங்களுக்கு மேலாக இருந்த இடங்கள், நேரம் பற்றிய விவரங்களை சுகாதார அமைச்சு அதன் இணையப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. அந்த இடங்களுக்கு, குறிப்பிட்ட நேரங்களில் சென்றவர்கள் தங்களது உடல் நலனைக் கண்காணிப்பதுடன், உடல் நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக, மருத்துவரின் உதவியை நாடவேண்டும். ஆனால், அந்த இடங்களைத் தவிர்க்க வேண்டியதில்லை.

முழுமையான பட்டியலை சுகாதார அமைச்சின் இணையப்பக்கத்தில் காணலாம்.

உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் 12ஆக குறைந்திருக்கிறது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 16 ஆக இருந்தது.

ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் கடந்த வார தினசரி சராசரி 7ஆக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 8 ஆக இருந்தது.

இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நேற்று மூன்றாவது நாளாக கொவிட்-19 தொடர்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்கொவிட்-19