நிர்வாகப் பல்கலைக்கழகம் எட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு

இடைப்பருவ வாழ்க்கைத்தொழிலர்களுக்குப் பொருத்தமான பாடப்பிரிவுகளை வழங்குவதற்காக சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், எட்டு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றவிருக்கிறது.

‘எஸ்ஜி ஒற்றுமை திறன்கள்’ திட்டத்தின்கீழ், வாழ்க்கைத்தொழிலின் நடுப்பகுதியில் இருக்கும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகளை இலக்காகக் கொண்டு இந்தத் திட்டம் இடம்பெறுகிறது.

குறிப்பாக, சிறிய, நடுத்தர நிறுவனங்களின் தேவைகளை நிறைவுசெய்வதை இந்தப் புதிய பங்காளித்துவம் இலக்காகக் கொண்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் பங்குபெறும் நிறுவனங்கள், பயிற்சியாளர்களுக்குத் திட்டப்பணிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் சாத்தியமிருந்தால் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பையும் வழங்கும்.

இதன் தொடர்பில், நேற்றுக் காலை நடந்த ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர்’ கருத்தரங்கின்போது சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகமும் எட்டு தொழிலகப் பங்காளிகளும் புரிந்துணர்வுக் குறிப்பு ஒன்றில் கையெழுத்திட்டன.

வர்த்தக, சூழலியல் நிலைத்தன்மை, வர்த்தகப் புத்தாக்கம், மின்னிலக்க உருமாற்றம் உள்ளிட்ட பாடங்களில் பயிற்சி வழங்கப்படும்.

பயிற்சியாளர்கள் ஆறு மாத காலம் பல்கலைக்கழக வகுப்புகளில் பங்கேற்பர். அதன்பின், பங்கேற்கும் நிறுவனங்களில் மூன்று மாத காலம் செயல்சார் பயிற்சி பெறுவர்.

கொவிட்-19 கிருமித்தொற்றுச் சூழலில் வர்த்தகங்களும் ஊழியரணியும் எப்படி தங்களை மறுவடிவமைத்துக்கொள்வது என்பது தொடர்பில் அந்தக் கருத்தரங்கு இடம்பெற்றது. ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர்’, ‘தி பிஸ்னஸ் டைம்ஸ்’ மற்றும் ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ்கள் இணைந்து பாய லேபாரில் உள்ள வாழ்நாள் கற்றல் நிலையத்தில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

சிறிய அளவிலான பங்கேற்பாளர்கள் நேரிலும் பெருவாரியானோர் காணொளி வழியாகவும் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

கருத்தரங்கு தொடங்குமுன் உரையாற்றிய கல்வி அமைச்சர் ஓங் யி காங், “வருகின்ற மாதங்கள் சீராக இராது. அதற்கேற்றபடி, ஊழியர்களும் நிறுவனங்களும் தங்களை மாற்றியமைத்து, புதிய திறன்களை வளர்த்துக்கொண்டு, புதிய வாய்ப்புகளைத் தேட வேண்டும்,” எனக் கேட்டுக்கொண்டார்.

நேற்று தொடங்கி, அடுத்த மாதம் 16ஆம் தேதி வரை அனுசரிக்கப்படும் ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் மாதத்தின்’ ஓர் அங்கமாக இந்தக் கருத்தரங்கு இடம்பெற்றது.

வாழ்க்கையின், வாழ்க்கைத்தொழிலின் வெவ்வேறு படிநிலைகளில் உள்ள சிங்கப்பூரர்களின் தேவைகளை நிறைவேற்றும் விதமாக பல, பெரும்பாலும் மெய்நிகர் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேலை தேடுவோருக்கு, குறிப்பாக இடைப்பருவ வாழ்க்கைத்தொழிலர்களுக்கு, கொரோனா தொற்று பொருளியலில் ஏற்படுத்திய தாக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்குப் பயிற்சி வாய்ப்புகள் கிடைக்கலாம்.

பல்வேறு பங்காளிகளுடன் இணைந்து ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர்’ அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஸ்கில்ஸ்ஃபியூச்சர் மாதம், தேசிய வேலைகள் மன்ற முயற்சிகளுக்கு ஆதரவாக விளங்கும்.

இவ்வாண்டின் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் மாதத்தில் 80க்கும் மேற்பட்ட சமூக, கல்வி, தொழிலகப் பங்காளிகள் பங்கெடுக்கவுள்ளன. இதன்மூலம் 15,000க்கும் மேற்பட்டோரைச் சென்றடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டில் தேசிய இயக்கமாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்கில்ஸ்ஃபியூச்சர், சிங்கப்பூரர்களுக்கு வாழ்நாள் கற்றல் வாய்ப்புகளை வழங்க இலக்கு கொண்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!