'கோஜெக்'கில் பயணத்தை ரத்து செய்தால் $4 செலுத்த வேண்டும்

'கோஜெக்'கில் பயணத்தை ரத்து செய்தால் $4 செலுத்த வேண்டும்

1 mins read
1ae8a1e3-11e1-43c4-adfb-15874dacb0d5
ஒரு பயணத்திற்கு ஒரே ஒரு நிறுத்தம் என்றிருந்த விதியை, ஒரு பயணத்தின்போது அதிகபட்சம் மூன்று இடங்களில் பயணிகளை இறக்கிவிடும் விதமாக கோஜெக் மாற்றியுள்ளது. படம்: கோஜெக் -

'கோஜெக்' கைபேசிச் செயலி வழியாக வாடகை காரை முன்பதிவு செய்வோர், பின்னர் அதை ரத்து செய்தால் இனி ரத்துக் கட்டணமாக $4 செலுத்த வேண்டும். இவ்விதி அடுத்த வாரத்தில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. பயணி ஒருவரின் முன்பதிவு கோரிக்கையைத் தொடர்ந்து, அவருக்கான ஓட்டுநரைப் பணியமர்த்தி ஐந்து நிமிடம் அல்லது அதற்குமேல் ஆகிவிட்டாலோ அல்லது அந்த ஓட்டுநர், பயணியின் இடத்திற்குச் சென்றுவிட்டாலோ ரத்துக் கட்டணம் வசூலிக்கப்படும். அதே நேரத்தில், இதுவரை

ஒரு பயணத்திற்கு ஒரே ஒரு நிறுத்தம் என்றிருந்த விதி, ஒரு பயணத்தின்போது அதிகபட்சம் மூன்று இடங்களில் பயணிகளை இறக்கிவிடும் விதமாக மாற்றப்பட்டுள்ளது.