ஒவ்வொருவரும் பாடுபட்டு பரவலை தடுக்க அழைப்பு

ஒவ்வொருவரும் பாடுபட்டு பரவலை தடுக்க அழைப்பு

3 mins read
70cf4cfc-2196-4f15-bd2f-61f7f69c6267
இரண்டாவது கிருமிப் பரவல் அலையைத் தவிர்க்க இயன்றவரை நாம் ஒவ்வொருவரும் நமது பங்கை ஆற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங். படம்: எஸ்டி, யாஹுய் -

சமூக அளவிலான தொற்று எண்ணிக்கை குறைவாகத் தொடரும் நிலையில் இரண்டாவது கிருமித்தொற்று அலையைச் சமாளிக்க சிங்கப்பூர் தயாராக வேண்டும் என சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் கூறியுள்ளார்.

சமூகத்தில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த வாரம் சராசரியாக நாள் ஒன்றுக்கு 12 பேர் என்னும் விகிதத்தில் இருந்தது. ஜூலை முதல் வாரத்தில் இருந்த நிலவரத்தைப் போலவே இது இருந்தது.

கொவிட்-19 விவகாரத்தைக் கையாளும் அமைச்சுகள் நிலை பணிக்குழு நேற்று மாலை இணையம் வழி நடத்த்திய செய்தியாளர் கூட்டத்தில் இந்த விவரத்தைக் கூறியது.

"கடும் சுவாசக்கோளாற்றால் பாதிக்கப்பட்டு தொற்றுக்கான அறிகுறி காணப்படுவோரை பரிசோதிப்பது அதிகரித்து வருவதாகவும் குழு குறிப்பிட்டது. சராசரியாக நாள் ஒன்றுக்கு அதுபோன்ற 2,400 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த இரு வாரங்களாகப் பதிவாகும் சமூக அளவிலான தொற்றுச் சம்பவங்களில் பாதிக் கும் மேற்பட்டவை எவ்விதத் தொடர்பும் இல்லாதவை. இவற்றில் 10ல் எழுவருக்கு அறிகுறி காணப்படவில்லை," என்று குழுவின் இணைத் தலைவருமான திரு கான் தெரிவித்தார்.

"எவ்விதத் தொடர்பும் இல்லாமல் சமூக அளவில் தொற்று உறுதி செய்யப்படுவோரில் பெரும்பாலானோர் கட்டுமானம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறை களுடன் சம்பந்தப்பட்டவர்கள்.

"தீவிர பரிசோதனைகள் மூலம் சமூக அளவிலான பரவல் குறைவாக இருப்பினும் அதன் எண்ணிக்கை நிலையாகவே உள்ளது. உலகம் இன்னும் மீளவில்லை என்பதால் நம்மிலும் பரவல் தொடருகிறது என்று மனநிறைவு அடைந்துவிட முடியாது.

"அமெரிக்கா, பிரேசில் போன்ற பல நாடுகளில் கொவிட்-19 தொற்று எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. எல்லாரும் ஒன்றுசேர்ந்து கூட்டு முயற்சியாகக் கட்டுப்படுத்தாவிடில் நிலைமை இன்னும் மோசமாகும் என உலக சுகாதார நிறுவனம் அண்மையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

"சீனா, நியூசிலாந்து போன்ற நாடுகள் கடுமையான நடவடிக்கைகள் மூலம் கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. அதே நேரம் வேறு சில நாடுகள் கடுமையான சமூக இடைவெளி கட்டுப்பாடுகளைத் தளர்த்திய பின்னர் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்

பதைக் கண்டு வருகின்றன. பரவலைக் கட்டுப்படுத்த ஒருசில நாடுகள் கட்டுப்பாடுகளை மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டு உள்ளது," என்று அமைச்சர் கான் தெ ரிவித்தார்.

"இரண்டாவது கிருமிப் பரவல் அலைக்கு நாமும் தயாராக வேண்டும்," என்று குறிப்பிட்ட அவர், "எனினும் அந்த நிலையைத் தவிர்க்க இயன்றவரை நாம் ஒவ் வொருவரும் நமது பங்கை ஆற்ற வேண்டும்," என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "மீண்டும் கிருமிப் பரவல் தலைதூக்கிய நாடுகள் தொடர்பில் சுகாதார அமைச்சு மறுஆய்வு செய்தது.

பாதுகாப்பு நடைமுறைகளையும் பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளையும் சரிவரப் பின்பற்றாததால் பல நாடுகளில் அல்லது வட்டாரங்களில் கிருமிப் பரவல் மறுபடியும் தோன்றியது மறுஆய்வில் தெரிய வந்துள்ளது.

"உடல்நிலை சரியில்லாத நிலையிலும் வெளியே செல்வதும் சமய நிகழ்வுகள், விருந்து நிகழ்ச்சிகள் போன்ற பெரிய குழுக்களில் ஒன்றுகலந்து பங்கேற்பதும்கூட சில நாடுகளில் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு தோக்கியோவில் 300க்கும் மேற்பட்ட கிருமித்தொற்று சம்பவங்கள் இரவுநேர பொழுதுபோக்கு மையங்களுடன் தொடர்புடையவை என பதிவாகி உள்ளது. அதேநேரம் ஹாங்காங்கில் உணவகங்களில் சாப்பிட்டு முடித்தும் முகக்கவசத்தை மீண்டும் அணியாததால் கிருமி பரவும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

"வேலையிடங்களில் பாதுகாப்பு நடைமுறைகளை சரிவரப் பின்பற்றாததன் காரணமாக பல வட்டாரங்களில் கிருமிப் பரவல் தொகுதிகள் உருவாயின," என்று அமைச்சர் தமது விளக்கத்தில் தெரிவித்தார்.

"மேலும் அதிக நீக்குப்போக்கு களையும் விதித் தளர்வுகளையும் பல சிங்கப்பூரர்களும் நிறுவனங்களும் ஆர்வத்துடன் எதிர்பார்ப் பதை அறிகிறோம். ஆயினும் எளிதில் கிருமிப் பரவல் ஏற்படும் சூழலை இதுபோன்ற சம்பவங்கள் மூலம் நாம் அறிந்துகொள்ளவேண் டும். இதுபோன்ற நிகழ்வுகளில் ஒருவருக்கொருவர் நெருக்கமாகவும் நீண்ட நேரமும் அருகில் இருக்கும் நிலை உள்ளது. வேலையிடங்கள், சமய ஒன்றுகூடல்கள், இரவுநேரக் கூடங்கள் ஆகியன இவற்றுள் அடங்கும்.

"இதுபோன்ற காரணங்களால்தான் அதிக இடர்ப்பாட்டை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதில் எச்சரிக்கை அணுகுமுறையை சிங்கப்பூர் பின்பற்றி வருகிறது.

"கிருமிப் பரவல் ஆபத்தைக் குறைக்க வேலையிடங்கள் போன்றவற்றில் கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்யவும் இவைதான் காரணங்கள். சில கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் வசதிக்குறைவை ஏற்படுத்தலாம். ஆயினும் பாதுகாப்பாக இருக்க இதுவே சிறந்த வழி," என்றார் திரு கான்.

அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டாலும் கொவிட்-19 தடுப்புக்கான அரசாங்க முயற்சிகள் தடைபடாது என்றும் அவர் கூறினார்.