அனுபவம் வாய்ந்த அரசதந்திரி டோனி கமால் சித்திக் மரணம்

சிங்­கப்­பூ­ரின் பழுத்த அனு­ப­வம் வாய்ந்த அர­ச­தந்­தி­ரி­யான டோனி கமால் சித்­திக் தமது 80வது வய­தில் மார­டைப்பு கார­ண­மாக கடந்த வெள்­ளிக்­கிழமை மர­ணம் அடைந்­தார்.

அவர் ஆக அண்­மைய காலத்தில் கரீ­பிய நாடு­களில் சிறப்பு அதிகாரம் பெற்ற தூதராகப் பணி­யாற்­றி­னார்.

திரு சித்­திக்­குக்கு ஷரோன் என்ற மனை­வி­யும் சோஃபியா, சமீரா என்ற புதல்­வி­களும் மிஷா, ராக்ஸி என்ற பேத்­தி­களும் இருக்­கி­றார்­கள்.

இவர், முன்பு ஆர்­டிக் கண்ட நாடுகளின் விவ­கா­ரங்­க­ளுக்­கான சிறப்புத் தூத­ரா­க சேவை­யாற்­றி­னார்.

பின்­லாந்து, ஹங்­கேரி, இத்­தாலி, நார்வே, சுவீ­டன், கிரீஸ் நாடு­கள் உள்­ளிட்ட பல ஐரோப்பிய நாடு­க­ளுக்­கான சிங்­கப்­பூரின் தூத­ராக திரு சித்­திக் பணி­யாற்றி இருக்­கி­றார்.

அர­சாங்­கச் சேவை­யில் இருந்து 1996ல் ஓய்வு பெற்ற இவர், தனி­யார் துறைக்­குச் சென்­றார். ஆலோ­சனை நிறு­வனம் ஒன்றை நிறுவி அதன் நிர்­வாக இயக்­கு­ந­ரா­கப் பணி­யாற்­றி­னார்.

திரு சித்­திக், மிக­வும் பிர­ப­ல­மான, ஆற்­றல்­மிக்க வெளி­யுறவுச் சேவை அதி­காரி என்று மத்­திய கிழக்­குப் பயி­ல­கம் என்ற அமைப்­பின் தலை­வ­ரான பிலஹரி கெள­சி­கன் தெரி­வித்­தார். திரு சித்­திக்­கி­டம் இருந்து ஒரு தலை­முறையைச் சேர்ந்த அர­ச­தந்­தி­ரி­கள் பல­வற்­றை­யும் கற்­றுக்­கொண்டு இருக்­கி­றார்­கள் என்­றார் அவர்.

வியட்­னாம் ஆக்­கி­ர­மிப்­புக்­குப் பிறகு கம்­போ­டியா வாக்­கெ­டுப்­புப் பிரச்­சி­னையை 1980களில் ஐநா­வில் எழுப்­பி­ய­தில் திரு சித்­திக் மிக முக்­கி­ய­மா­ன­வர் என்று 2010 முதல் 2013 வரை வெளி­யு­றவு அமைச்சின் நிரந்­த­ரச் செய­லா­ள­ரா­கப் பணி யாற்­றிய திரு கெள­சி­கன் குறிப் பிட்டார்.

திரு சித்­திக் தனி ஒரு­வ­ராக ஆர்­டிக் மன்­றத்­தில் கவ­னிப்­பா­ளர் அந்­தஸ்தை சிங்­கப்­பூ­ருக்கு பெற்­றுத் தந்­தார் என்­றா­ர­வர்.

திரு சித்­திக் பல­ரோ­டும் நட்பு வட்டத்தை மிக­வும் வெற்­றி­கரமான முறை­யில் ஏற்­ப­டுத்­திக் கொண்­டி­ருந்­த­வர் என்­ப­தில் ஐயமே இல்லை என்று பிஜி நாட்­டிற்­கான முன்­னாள் சிங்­கப்­பூர் தூதர் வர்­கிஸ் மேத்­யூஸ் தெரி­வித்­தார்.

திரு சித்­திக் இளம் அர­ச­தந்­தி­ரி­க­ளு­டன் பெருந்­தன்­மை­யு­டன் நடந்­து­கொண்­ட­தாக பொதுத் தூதர் ஓங் கெங் யோங் குறிப்­பிட்­டார்.

திரு சித்­திக்­கின் நல்­லு­டல் சனிக்­கி­ழமை மாலை சுவா சூ காங் முஸ்­லிம் இடு­காட்­டில் நல்­ல­டக்­கம் செய்­யப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!