தனது சொந்த மகளை மானபங்கம் செய்த 55 வயது தந்தைக்கு மூன்று ஆண்டு ஐந்து மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உட்லண்ட்ஸ் வட்டாரத்திலுள்ள அடுக்குமாடி வீட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த அந்த ஆடவர், 2015ஆம் ஆண்டு முதல் அப்போது 14 வயதாக இருந்த தனது மகளைப் பலமுறை மானபங்கம் செய்தார். 2017ஆம் ஆண்டில் அந்தப் பெண் தன் தந்தைக்கு எதிராக போலிசில் புகார் செய்தார்.
தனது தந்தையின் செயலால் விளைவாக மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தன் உயிரை மாய்த்துக்கொள்ள இருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மானபங்கத்திற்கான ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அவருக்கு ஈராண்டு வரையிலான சிறைத்தண்டனை, பிரம்படி அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். இந்த ஆடவர் 50 வயதைக் கடந்திருப்பதால் அவருக்கு பிரம்படி தண்டனை கிடையாது.

