தண்டனைக்கு எதிரான லாரி ஓட்டுநரின் மேல்முறையீடு நிராகரிப்பு

1 mins read
a7f8b5c5-5b13-4eb2-833e-fbce5c210472
-

ஒரு சைக்கிளோட்டி மீது வேண்டுமென்றே தனது லாரியைக் கொண்டு மோதிய குற்றச்சாட்டுக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக 59 வயது லாரி ஓட்டுநரான டியோ செங் தியோங் மேல்முறையீடு செய்திருந்தார். அதை நேற்று உயர் நீதிமன்றம் நிராகரித்து, அவரது தண்டனையான ஏழு வாரச் சிறை, $500 அபராதம், இரண்டு ஆண்டுகளுக்கு வாகனமோட்ட தடை ஆகியவற்றை உறுதிப்படுத்தியது.

2018ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதியன்று தமக்கு முன் சாலையில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த எரிக் சியுங் ஹோயுவை, திரு டியோ வேண்டுமென்றே மோதிய துடன் அந்த விபத்து குறித்து 24 மணி நேரத்துக்குள் போலிசுக்குத் தெரிவிக்கவில்லை.

லாரியின் பாதையை மறைத்துக்கொண்டு சைக்கிளோட் டிய திரு சியுங்குக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் $2,800 அபராதம் விதிக்கப்பட்டது. திரு டியோவுக்கு முன்னதாக விதிக்கப்பட்டிருந்த தண்டனை மிகக் கடுமையானது அல்ல என்று தெரிவித்த நீதிபதி சான் செங் ஓன், சைக்கிளை மோதும் எண்ணத் துடன் செயல்பட்ட டியோவின் செயல் வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒன்று என்றார்.