குடியிருப்பாளர்களைத் தெரிந்துகொள்ள முற்படும் மவுண்ட்பேட்டன் எம்.பி. லிம்

குடியிருப்பாளர்களைத் தெரிந்துகொள்ள முற்படும் மவுண்ட்பேட்டன் எம்.பி. லிம்

2 mins read
1fd1c458-9cf4-4e44-8be3-4eaf59ad7b5a
மவுண்ட்பேட்டன் தனித்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் பியாவ் சுவான் (நடுவில்), கடந்த புதன்கிழமை ஓல்டு ஏர்போர்ட் ரோடு உணவங்காடி நிலையத்தில் குடியிருப்பாளர் களுடன் உரையாடினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஓல்டு ஏர்போர்ட் ரோட்டில் உள்ள உணவங்காடி நிலையத்துக்கு வழக்கமாக செல்லும் 73 வயது திரு இங், அங்கு அடிக்கடி பார்க்கும் ஒரு நபர் தனது மவுண்ட்பேட்டன் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) திரு லிம் பியாவ் சுவான்.

கடந்த புதன்கிழமை அங்கு வந்த திரு லிம், அங்கு தையல் கடை வைத்திருக்கும் உரிமையாளரைப் பார்த்து, "எலிஸ் நலமாக இருக்கிறீர்களா," என்று விசாரித்தார்.

"சில அரசியல்வாதிகளை தொலைக்காட்சியில்தான் பார்க்கமுடியுமே தவிர நீங்கள் நேரில் பார்க்க முடியாது. ஆனால், திரு லிம்மை குடியிருப்பாளர்களுக்குத் தெரியும், அவருக்குக் குடியிருப்பாளர்களைத் தெரியும்," என்றார் திரு இங்.

அந்த வட்டாரத்தில் 57 வயது திரு லிம்மைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு அவர் மிக எளிதாக குடியிருப்பாளர்களுடன் இணைந்து உறவாடுவதைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

குடியிருப்பாளர்களுடன் அடிக்கடி கலந்துரையாடல் நடத்தி அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவும் திரு லிம், 24,246 வாக்காளர்களைக் கொண்ட மவுண்ட்பேட்டன் தொகுதிக்கான தேர்தலில் மக்கள் குரல் கட்சியின் சிவகுமரன் செல்லப்பாவைத் தோற்கடித்து, 73.82% வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

2015 பொதுத் தேர்தலில் திரு லிம் 71.86% வாக்குகளைப் பெற்று வென்றார்.

மக்கள் சந்திப்புக் கூட்டங்களைத் தவிர திரு லிம், சந்தை, வீடுகளுக்கு வாரத்துக்கு ஒரு முறை சென்று குடியிருப்பாளர்களைச் சந்திக்கிறார். வாரயிறுதியில் அவர் சமூக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

"வெளியே சென்று குடியிருப்பாளர்களைச் சந்திப்பது எனக்கு மிகவும் முக்கியம். அவர்களின் எம்.பி என்ற முறையில் அவர்களுக்கு சேவையாற்றுவதே எனது முன்னுரிமை," என்றார் திரு லிம்.