கொவிட்-19: மின்னிலக்கப் பயன் விளைவு பற்றி ஆய்வு

கொவிட்-19: மின்னிலக்கப் பயன் விளைவு பற்றி ஆய்வு

2 mins read
4a4d27da-a944-4e5b-a82e-c7122bb4f34f
சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­கலைக்­க­ழ­கம். படம்: எஸ்யுஎஸ்எஸ், ஃபேஸ்புக் -

12 நாடுகளுடன் சேர்ந்து சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் நடத்துகிறது

சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­கலைக்­க­ழ­கம் அனைத்­து­லக ஆய்­வா­ளர்­கள் கூட்­ட­மைப்­பின் ஓர் அங்­க­மாக இருக்­கிறது.

கொவிட்-19 சூழ­லில் மின்­னி­லக்­கத் தொழில்­நுட்­பங்­க­ளைப் பயன்­ப­டுத்­தும் சமூ­கம் மற்­றும் தனிப்­பட்­ட­வர்­க­ளி­டையே அதன் தாக்­கம் எந்த அள­வுக்கு இருக்­கிறது என்­ப­தைக் கண்­ட­றிய இந்­தப் பல்­க­லைக்­க­ழ­கம் ஆய்வு ஒன்றை நடத்­து­கிறது.

மக்­கள் மின்­னி­லக்­கத் தொழில்­நுட்­பங்­க­ளைப் பயன்­ப­டுத்தி சமூக அள­வி­லான தொடர்­பு­களை எப்­படி ஏற்­ப­டுத்­திக்­கொள்­கி­றார்­கள்; அத்­தொ­டர்­பு­களை எப்­படி நிலை­நாட்டி வரு­கி­றார்­கள் என்­பதை எல்­லாம் ஆய்வு கண்­ட­றி­யும் என்று இப் பல்­க­லைக்­க­ழ­கம் அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தது.

மின்­னி­லக்­கத் தொழில்­நுட்­பங்­கள் ஒரு­வ­ரின் தனி­மை­யைக் குறைக்க எந்த அள­வுக்கு உத­வும் என்­ப­தை­யும் ஆய்வு ஆரா­யும்.

'கொவிட்-19: தொழில்­நுட்­பம், பய­னீடு, நடத்தை, சமூ­கத் தொடர்­பு­கள், சுய தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­ளு­தல், மற்­றும் தனிமை' என்று குறிப்­பி­டப்­படும் அந்த ஆய்­வுக்கு பிரிட்­ட­னைச் சேர்ந்த டாக்­டர் ஹன்னா ஆர் மார்ஸ்­டன், மற்­றும் டாக்­டர் சாரா ஏர்ல் ஆகிய இரு­வ­ரும் தலைமை தாங்­கு­கி­றார்­கள்.

அந்த ஆய்­வில் சிங்­கப்­பூ­ரு­டன் ஆஸ்­தி­ரியா, பிரே­சில், பிரான்ஸ், ஜெர்­மனி, இந்­தியா, மால்டா, போர்ச்­சுக்­கல், ருமே­னியா, ஸ்பெ­யின், துருக்கி, பிரிட்­டன் ஆகிய நாடு­கள் கலந்­து­கொள்­கின்­றன.

கொவிட்-19 கால­கட்­டத்­தில் மின்­னி­லக்­கத் தொழில்­நுட்­பங்­களின் பய­னீடு மற்­றும் அதன் தாக்­கம் தொடர்­பில் அனைத்­து­லக அள­வில் பல நாடு­களும் சேர்ந்து நடத்­தும் முதல் ஆய்வு இது­தான் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கொரோனா சூழ­லில் ஒரு­வர் கொண்­டுள்ள இணை­யத் தொடர்பு மூலமாக அவர் சமூ­கத்­து­டன் தொடர்­பில் இருப்­ப­தா­கக் கரு­து­கி­றரா; மின்­னி­லக்­கத் தொடர்பு கார­ண­மாக ஒரு­வ­ரின் தனிமை குறை­கி­றதா போன்ற கேள்­வி­களுக்கு ஆய்வு மூலம் திரட்­டப்­படும் தக­வல்­கள் பதில் அளிக்­கும் என்று சிங்கப்பூர் பல்கலைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த டாக்­டர் கொ பெய்-சுன் தெரி­வித்­த­தார்.

இவர்­தான் சிங்­கப்­பூ­ரில் நடக்கும் ஆய்­வுக்­குத் தலைமை ஏற்­றுள்­ளார்.

சிங்­கப்­பூர் ஆய்வு கடந்த மே மாதம் தொடங்­கி­யது. அது வரும் 2020 ஆகஸ்­டில் முடி­வ­டை­யும். ஆய்வு முடி­வு­கள் 2021ல் உலக அள­வில் வெளி­யி­டப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

தொழில்­நுட்­பம் எப்­படி பயன்­படுத்­தப்­ப­டு­கிறது: கொவிட்-19 சூழ­லில் மின்­னி­லக்­கத் தொழில்­நுட்­பங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வோ­ரி­டம் ஏற்­ப­டக்­கூ­டிய தாக்­கங்­கள்; சமூ­கத்­திற்குள் தொழில்­நுட்­பத்­தின் பணி; கல்வி, சமூக வளங்­கள், குடும்ப நில­வ­ரங்­கள் தொடர்­பில் மின்­னி­லக்­கப் பய­னீடு எப்­படி இருக்­கிறது என்ற நான்கு தலைப்­பு­க­ளின் கீழ் ஆய்வு நடக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

கொவிட்-19 கார­ண­மாக பல் வேறு கட்­டுப்­பா­டு­கள் நடப்­புக்கு வந்­துள்­ளன.

அவற்­றின் கார­ண­மாக பல­ரும் கடந்த சில மாதங்­க­ளாக வீட்டில் இருந்தே வேலை பார்த்து வரு­கிறார்­கள். பள்ளி மாண­வர்­களும் வீட்­டில் இருந்­த­ப­டியே கணினி, இணை­யம் மூலம் படிக்­கி­றார்­கள். இதுவே ஆய்வு நடத்த கார­ணங்­கள் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

ஆய்வு பொது­வா­னது. அதில் 18 மற்­றும் அதற்கு அதிக வய­துள்ள யார் வேண்­டு­மா­னா­லும் கலந்­து­கொள்­ள­லாம்.

மேல் விவ­ரங்­க­ளுக்கு https://healthwellbeing.kmi.open.ac.uk/covid-19-technology-social-connections-loneliness-leisure-activities/. என்ற முக­வ­ரிக்­குச் செல்­ல­லாம்.