‘கொவிட்-19 சூழல் தரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’

சுற்றுச்சூழல், சமூகப் பிரச்சினைகளில் மாபெரும் மாற்றங்களுடன் உலக வரலாற்றில் ஒரு பெரிய திருப்புமுனையையே கொவிட்-19 நெருக்கடி ஏற்படுத்தப் போவதாகக் கூறியுள்ளார் சிங்கப்பூர் டிபிஎஸ் வங்கிக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பியுஷ் குப்தா.

நிறுவனங்களையும் ஊழியர் களையும் நிதி நெருக்கடியிலிருந்து பாதுகாக்க அரசாங்கங்கள் பல வழிகளில் ஆதரவுத் திட்டங்களின் மூலம் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அதற்காக பில்லியன் கணக்கான பணத்தை செலவிடுகின்றன.

நிறுவனங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் நிதி உதவி வழங்கு வதற்கு முன் வேலை உருவாக்கம், பொருளியலுக்கு மீண்டும் புத்துயிர் அளித்தல், நாட்டின் நிலைத்தன்மை போன்ற துறைகளில் அரசாங்கங்கள் கவனம் செலுத்தவேண்டும் என்றார் திரு குப்தா.

நிறுவனங்களும் மக்களும் அரசாங்கத்தைச் சார்ந்து இருப்பதைத் தவிர்க்கும் வழியில் மாற்றுத் திட்டங்களை நாடுகள் கொண்டிருக்க வேண்டும் என்றும் நேற்று நடந்த டிபிஎஸ் ஆசியான் இன்சைட்ஸ் மாநாட்டில் கூறினார். கொவிட்-19 நெருக்கடியால் வேலையிழந்தோர் தங்கள் குடும்பத்தை நடத்துவதற்கும் வேலைவாய்ப்புகளைக் காப்பாற்றுவதற்காக நிறுவனங்களுக்கும் அரசாங்கங்கள் நிதியுதவி வழங்கி வருகின்றன.

இந்த அணுகுமுறையை அரசாங்கங்கள் நீண்ட காலத்திற்குத் தொடர முடியாது. ஏனெனில் அந்த அளவுக்கு அரசாங்கங்களிடம் நிதி இருப்பு இருக்க வாய்ப்பில்லை. அதேவேளையில் அதுமாதிரியான போக்கு மக்களை ஒழுக்க நெறியில் நழுவச் செய்துவிடும். நிரந்தர உதவி பெறும் வழக்கத்தைப் பெற்றவர்களாகிவிடுவர். எனவே, அரசாங்கங்கள் இதுபோன்ற நிதிக்கொள்கைகளைக் கொண்டிருத்தலைக் கைவிட வேண்டும். இதுபோன்ற நிவாரண நிதியே இறுதி முடிவாக இருக்காது என்பதை அரசாங்கங்கள் உணர வேண்டும்.

அரசாங்கங்கள் நிதி உதவி மூலம் தற்போதையப் பிரச்சினை களுக்குத் தீர்வு காண்பதில் இருந்து விலகி, நாடு எதிர்நோக்கும் முக்கியப் பிரச்சினைகளைக் அடையாளம் கண்டு அதற்கேற்ப கொள்கைகளை வகுத்தால் கொவிட்-19 நெருக்கடியால் ஏற்பட்ட புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி பொருளியலை மேம்படுத்திக் கொள்ளலாம் என்றார் திரு குப்தா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!