பதின்ம வயதினரை மானபங்கம் செய்த பயிற்றுவிப்பாளர்

1 mins read
0d5a4b1d-ceab-480b-8eff-a612062419ba
-

2013ஆம் ஆண்டில் இளம் விளையாட்டு வீராங்கனையை மானபங்கம் செய்த குற்றத்திற்காக மூத்த திடல் தட பயிற்றுவிப்பாளர் லோ சியாங் போவுக்கு 21 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லோ சான் பியூ என பிரபலமாக அழைக்கப்படும் அந்த 75 வயது ஆடவர், அந்தப் பெண்ணைத் தகாத முறையில் தீண்டியதாக மாவட்ட நீதிமன்றம் கடந்த மாதம் உறுதி செய்தது. சம்பவம் நடந்தபோது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 18 வயது.

இந்தக் குற்றங்கள் 2013ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்திற்கும் மார்ச் மாதத்திற்கும் இடையே இரண்டு முறை நடந்ததாகக் கூறப்படுகிறது.