மதுபானம் அருந்துவதற்கு ஒன்றுகூடிய இளையர்கள் 10 பேர் மீது குற்றச்சாட்டு

கொவிட்-19 நோய்ப் பரவல் காலகட்டத்தில், மது அருந்துவதற்காக ஒன்றுகூடிய 10 இளையர்கள் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. அவர்கள் பாதுகாப்பான இடைவெளி நடைமுறைகளைப் பின்பற்ற தவறியதாகவும் கூறப்படுகிறது.
ஹேவ்லாக் ரோடு அருகே புளோக் 42 பியோ கிரசென்ட்டில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் மேற்கூறப்பட்ட குற்றங்களைப் புரிந்ததாக அந்த 10 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

கொவிட்-19 கட்டுப்பாடுகள் இரண்டாம் கட்டமாக தளர்த்தப்பட்ட பிறகு, ஜூன் 27ஆம் தேதி பின்னிரவு அவர்கள் ஒன்றுகூடினர்.
சாய் ரகு வைஷ்ணவி ரகு, 18, அக்லிமா அப்துல் அஸ்மி, 19, முகம்மது இமான் அப்துல் ரஹிம், 19, ரெமி ஷான் ஹயில் மீ, 20, முகம்மது ஸேக் டானியல் அகமது ஸாக்கி, 20, நூர்ஷமி நூர்ஹிஷாம், 21, நூர் சலிஸா முகம்மது சனி, 23, நூருல் ஷீலா நடஷா சுஹைமி, 25, நூரஸ்னி இத்னின், 31, முகம்மது ஸாக்கி ஜொஹாரி, 33 ஆகியோர் அந்த 10 பேர்.

கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்தின்கீழ் இரு குற்றச்சாட்டுகளும் மதுபானக் கட்டுப்பாட்டு (விநியோகம் மற்றும் உட்கொள்ளுதல்) சட்டத்தின்கீழ் ஒரு குற்றச்சாட்டும் அவர்கள் ஒவ்வொருவர் மீது சுமத்தப்பட்டன.
கடந்த ஜூன் 19ஆம் தேதி கொவிட்-19 கட்டுப்பாடுகள் இரண்டாம் கட்டமாக தளர்த்தப்பட்டன. அதன்படி, நாள் ஒன்றுக்கு ஐந்துப் பேர் வரை ஒரு வீட்டிற்குச் செல்லலாம்.

உணவகம் போன்ற பொது இடங்களில் ஐந்து பேர் வரை ஒன்றுகூட அனுமதி வழங்கப்படுகிறது.
எனினும், பாதுகாப்பான இடைவெளி நடைமுறையை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். அதோடு, பல்வேறு குழுக்களுடன் கலந்து பழகுவதைத் தவிர்க்க வேண்டும்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் குறைந்தது இருவர், புளோக் 42 பியோ கிரசென்ட்டில் வேறு வீடுகளில் வசிக்கின்றனர். நூர்ஷமி, ஸேக் டானியல் ஆகியோர் அந்த இருவர். எஞ்சியவர்கள் ஜாலான் புக்கிட் மேரா, தெலுக் பிளாங்கா கிரசென்ட், புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 8 ஆகிய மற்ற இடங்களிலிருந்து வந்தனர்.

பியோ கிரசென்ட்டில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் ஜூன் 27ஆம் பின்னிரவு 1 மணியளவில் மது அருந்த அந்த 10 பேரும் ஒன்றுகூடியதாகக் கூறப்படுகிறது.
பொது இடத்தில் இரவு 10.30 மணி முதல் காலை 7 மணி வரை மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் அவர்கள் மது அருந்தியதாகச் சொல்லப்படுகிறது.

இந்த 10 பேர் போக, 14 வயது சிறுவன் உட்பட வேறு மூவரும் ஒன்றுகூடலில் ஈடுபட்டதாக போலிஸ் இன்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
அந்தச் சிறுவனுக்கு 12 மாத நிபந்தனையுடன் கூடிய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எஞ்சிய இருவர் வேறு குற்றங்கள் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

பியோ கிரசென்ட் புளோக்கில் பின்னிரவு 12.50 மணியளவில் இரைச்சல் ஏற்பட்டது தொடர்பில் புகார் கிடைத்ததைத் தொடர்ந்து போலிசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.அங்கு 13 பேர் ஒன்றுகூடி இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். அங்கு மதுபான போத்தல்கள் இருந்ததையும் அவர்கள் கவனித்தனர்.

இந்நிலையில், தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் தாங்கள் ஒப்புக்கொள்ளப் போவதாக அந்த 10 பேரும் நீதிமன்றத்தில் கூறினர்.
அடுத்த மாதம் அவர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர்.

கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்தின்கீழ் சுமத்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் குற்றவாளிக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனையும் $10,000 வரை அபரதாமும் விதிக்கப்படலாம்.மீண்டும் மீண்டும் குற்றம் புரிபவருக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனையும் $20,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!