வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் பெரும்பாலும் இறக்கம்

வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் பெரும்பாலும் இறக்கம்

1 mins read
e3359d66-abaf-4fab-bf8b-e9fb8c12e4bd
-

வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் பெரும்பாலும் குறைந்து உள்ளன. கிருமிப் பரவல் முறியடிப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட் டதை அடுத்து வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்களுக்கான ஏலக் குத்தகை மூன்று மாதங்க ளுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு இன்று இரண்டாவது முறையாக ஏலக் குத்தகை நடத்தப்பட்டது. சிறிய வகை கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்ட ணம் $32,699ஆகப் பதிவானது.

இது இம்மாதம் 8ஆம் தேதி பதிவான தொகையைவிட 2.45 விழுக்காடு குறைவு. பெரிய வகை கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்ட ணம் 2.47 விழுக்காடு குறைந்து $35,001ஆகப் பதிவானது. சரக்கு வாகனங்களுக்கான வானக உரிமைச் சான்றிதழ் கட்ட ணம் 2.51 விழுக்காடு இறக்கம் கண்டது. அப்பிரிவுக்கான கட்டணம் $23,888ஆகப் பதிவானது.

இதற்கிடையே, மோட்டார் சைக்கிள்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் 15.48 விழுக் காடு குறைந்துள்ளது. அப்பிரிவுக்கான கட்டணம் $6,510ஆகப் பதிவானது. பொதுப் பிரிவுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் மட்டும் ஏற்றம் கண்டது. அப்பிரிவுக்கான கட்டணம் 0.03 விழுக்காடு அதிகரித்து $35,001 ஆகப் பதிவானது. பொதுப் பிரிவுக்கான கட்டணத்தை அனைத்துப் பிரிவு வாகனங்களுக் கும் பயன்படுத்தலாம். ஆனால் அது பெரும்பாலும் பெரிய வகை கார்களுக்குப் பயன்படுத்தப்படும்.