சுங்க நடவடிக்கை தளபத்தியக் கட்டடம் எழுப்புவதில் ஊழல்: நால்வர் மீது குற்றச்சா ட்டு

சுங்க நடவடிக்கை தளபத்தியக் கட்டடம் எழுப்புவதில் ஊழல்: நால்வர் மீது குற்றச்சா ட்டு

2 mins read
f2a7dcd4-7404-45f5-8364-ba074dca234e
-

சுங்கத் துறை நடவடிக்கைகள் தளபத்திய கட்டடம் எழுப்புவதில் ஊழல் நடந்ததாகவும் தொழில்நுட்ப அதிகாரி ஒருவருக்கு முறைகேடாக, அவர் கூடுதல் நேரம் வேலை பார்த்ததாக பதிவு செய்யப்பட்டு, அவருக்கு $5,320 கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பிரதிபலனாக லீ மன்செங் எனப் பெ யர் கொண்ட அந்த 53 வயது தொழில்நுட்ப அதிகாரி கட்டுமானப் பணிகளின் சோதனையின்போது கடுமை காட்டாமல் இருக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், உண்மையில் திரு லீ கூடுதல் நேரம் வேலை பார்க்கவில்லை என்பதால் அவர் மீது நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சாட்டப்பட்டது. இதன் தொடர்பில் கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கும் 2018ஆம் ஆண்டு செப்டம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் திரு லீ போலி ஆவணங்களை த் தயாரித்து கூடுதல்நேரம் வேலை பார்த்ததாக ஏமாற்று வேலையில் ஈடுபட்டார் என்று லஞ்ச , ஊழல் புலன்விசாரணைப் பிரிவு விளக்கியது.

அந்த காலகட்டத்தில் திரு லீ சிபிஜி கன்சல்டன்ட்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்தார் என்றும் கட்டுமானப் பணிகளை சோதனையிடும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த ஏமாற்று வேலையில் இவருடன் மேலும் மூவர் சம்பந்தப்பட்டிருந்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. சீன நாட்டவரான குவோ ஜியாக்சுன், 34, சிங்கப்பூரரான லின் ஹை ஃபெ ன், 45, ராஜேந்திரன் தியாகராஜன், 33, ஆகிய மேலும் மூவர் திரு லீயின் குற்றத்துக்கு துணை போனதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் மூவரும் 'நியூகான் பில்டர்ஸ்' என்ற கட்டுமான நிறுனத்தில் முறையே , கட்டுமானத் திட்ட மேலாளர், மூத்த கட்டுமான திட்ட மேலாளர், கட்டுமானத்தின் இயந்திர, மின்சார பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்தனர்.

திரு குவோஜியாக்சுன் லீக்கு $3,781.75 கொடுக்க ஒப்புக்கொண்டதுடன் கூட்டு சதியில் பங்குபெற்றார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. திரு லின் ஹை ஃபெ ன் லீக்கு $5,320.00 கொடுக்க இசைந்தார் என்றும் திரு ராஜேந்திரன் தியாகராஜன் $5,050.00 கொடுக்க சம்மதித்தார் என்றும் இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன.

இவர்கள் மீதான குற்றம், அரசு ஒப்பந்தம் தொடர்பான கட்டுமானக் குத்தகை என்பதால் அது நிரூபிக்கப்பட்டால், இவர்களுக்கு $100,00.00 வரை யிலான அபராதம், 7 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

அதேபோல் குற்றம் புரிந்தது தொடர்பில் போய் ஆவணங்கள் தயாரிப்பு உறுதியானால் அதற்கும் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.