டியுக்-என்யுஎஸ் தடுப்பூசி சோதனைக்கு அனுமதி

டியுக்-என்யுஎஸ் தடுப்பூசி சோதனைக்கு அனுமதி

1 mins read
50b824d4-6208-4c99-86a8-0ecfc088745d
டியுக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளியும் அமெரிக்காவின் மருந்து நிறுவனமான ஆர்க்டுரஸ் தெரபியூடிக்சும் இணைந்து உருவாக்கிய கொவிட்-19 தடுப்பூசியை மனிதர் களிடம் சோதிக்க பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. படம்: ராய்ட்டர்ஸ் -

டியுக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளியும் அமெரிக்காவின் மருந்து நிறுவனமான ஆர்க்டுரஸ் தெரபியூடிக்சும் இணைந்து உருவாக்கிய கொவிட்-19 தடுப்பூசியை மனிதர் களிடம் சோதிக்க பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவரீதியிலான சோதனை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உலகம் முழுவதும் 24 விதமான கொரோனா தடுப்பூசிகள் மனிதர்களிடம் சோதிக்கப்பட்டு மதிப்பிடப் பட்டு வருகிறது. இதில் சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட தடுப்பூசியும் ஒன்று. முன்னதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த பேட்டியில் மருத்துவப் பள்ளியின் தொற்றுநோய் தடுப்பு திட்டத்தின் துணை இயக்குநரான பேராசிரியர் ஊய் எங் இயோங், புதிய தடுப்பூசி எதிர்பார்ப்பையும் மிஞ்சியுள்ளதாகக் கூறியிருந்தார்.

வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து ஆகஸ்டு வரை மனிதர்களிடம் மேற்கொள்ளப்படும் தடுப்பூசி சோதனை முன்கூட்டியே தொடங்கப்படும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

ஆனால் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் மனிதர்களிடம் தடுப்பூசி சோதனையை மேற்கொள்ள சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையம் அனுமதியளித்துள்ளதாக இரு அமைப்புகளும் தெரிவித்தன.

'லுனார்-கோவ்19' எனும் தடுப்பூசி மருந்து விரைவில் மனிதர் களிடம் சோதிக்கப்படும்.

முதற்கட்டமாக பலதரப்பட்ட வயதுடைய 108 ஆரோக்கியமான தொண்டூழியர்கள் பங்கேற்பார்கள். இதில் எந்த அளவுக்கு தடுப்பூசி மருந்து கொடுக்கப்பட வேண்டும் என்பது நிர்ணயிக்கப்படும்.