துணை போலிஸ் அதிகாரியை தாக்கிய ஊழியருக்குச் சிறை

துணை போலிஸ் அதிகாரியை தாக்கிய குற்றத்துக்காகவும் அந்த அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றத்துக்காகவும் சீனாவைச் சேர்ந்த கட்டுமான ஊழியருக்கு இரண்டு மாதம், இரண்டு வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு குற்றங்களையும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து லியு ஹுயிபின், 44, எனப்படும் அந்த ஆடவருக்கான தண்டனை நேற்று அறிவிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 27ஆம் தேதி இரவு 7.40 மணியளவில் பொங்கோல் வட்டாரத்தில் உள்ள சுமாங்க் லிங்க் புளோக் 312பி-யின் கீழ்த்தளத்தில் லியு புகைபிடித்துக்கொண்டு இருந்தார்.

அப்போது அந்தப் பகுதியில் கடமையாற்றிக் கொண்டு இருந்த அருணா மகாதேவன், முகம்மது லத்தீஃப் முகம்மது அலி ஆகிய இரு துணைப் போலிஸ் அதிகாரிகள் லுயியை நெருங்கிச் சென்றனர்.

தடை விதிக்கப்பட்ட பகுதியில் புகை பிடித்ததற்காக நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்கான நோட்டீஸை அவரிடம் தர முயன்றனர். சிகரெட்டை அணைத்துவிட்டு அதிகாரிகளிடம் மாண்டரின் மொழியில் லியு பேசத் தொடங்கினார்.

மொழி புரியாததால் மேல் அதிகாரியை கைபேசியில் அழைத்த திருவாட்டி அருணா, லியுவை அதில் பேச வைத்தார்.

குற்றம் இழைத்திருப்பதால் தம்மைப் பற்றிய விவரங்களை அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு லியுவிடம் அந்த அதிகாரி மாண்டரினில் தெரிவித்தார்.

ஆனால் தம்மிடம் வேலை அனுமதிச் சீட்டு (ஒர்க் பர்மிட்) இல்லை என்றும் தமக்கு மேலும் ஒரு வாய்ப்பு தருமாறும் லியு அப்போது கேட்டுக்கொண்டார்.

கைபேசியில் பேசி முடித்த பின்னர் தம்மைப் பற்றிய விவரங்களை அதிகாரிகளிடம் தர அவர் மறுத்தார்.

அதனால் போலிசை அழைத்தார் அருணா.

அந்த நேரத்தில் தம்முடைய உடமைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட முயன்றார் லியு.

இதனை நீதிமன்றத்தில் விவரித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், லியுவைத் தடுக்க அருணா முயன்றதாகவும் ஆனால் அருணாவின் மணிக்கட்டைப் பிடித்த லியு அவரின் தோள்பட்டையை தள்ளியதாகவும் கூறினார்.

இருப்பினும் சமாளித்த அருணா லியுவை அந்த இடத்திலேயே போலிஸ் வரும் வரை காத்திருக்குமாறு கூறியதாகவும் வழக்கறிஞர் தெரிவித்தார்.

அந்த நேரத்தில் 12 வெள்ளியை அதிகாரிகளிடம் நீட்டினார் லியு. அதனை வாங்க மறுத்த அதிகாரி லத்தீஃபின் வலதுபக்கப் பையில் திணிக்க முயன்றார்.

ஆனால் லத்தீஃப் அதனைத் தடுத்துவிட்டார். பின்னர் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து டான் டோக் செங் மருத்துவமனைக்கு அருணா சென்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் நேர்மையாக நடந்துகொண்ட இரு அதிகாரிகளையும் போலிசும் லஞ்ச ஊழல் புலன்விசாரணைப் பிரிவும் பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளன.

லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றத்துக்காக லியுவுக்கு ஐந்தாண்டு வரையிலான சிறைத் தண்டனையும் $100,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

மேலும், அரசாங்க ஊழியரைத் தாக்கிய குற்றத்துக்கு ஏழாண்டு வரையிலான சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி ஆகியன விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!