சிங்கப்பூர் கட்டட, கட்டுமான ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக புதியவர் ஒருவர் பொறுப்பு ஏற்கவிருக்கிறார்.
தற்போது சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் கல்விமானாகிய 55 வயது ஹியுக் லிம் அந்தப் பொறுப்பை வகித்து வருகிறார்.
இவர், 2017ஆம் ஆண்டி லிருந்து ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் தமது பொறுப்பை பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக துணைத் தலைவரான 49 வயது கெல்வின் வோங்கிடம் அவர் ஒப்படைக்கவிருக்கிறார்.
இந்தப் பொறுப்பு மாற்றம் நவம்பர் 2ஆம் ேததியிலிருந்து நடப்புக்கு வரும் என்ற தேசிய வளர்ச்சி அமைச்சும் கட்டட, கட்டுமான ஆணையமும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது.
ஆணையத்துக்கு திரு லிம் ஆற்றிய பங்குக்கு அமைச்சும் ஆணையமும் நன்றி தெரிவித்துள்ளன.

