எண் 7 கியன் டெக் கிரசென்ட், 2ண் 2 டெக் பார்க் கிரசென்ட், எண் 12 டெக் பார்க் கிரசென்ட் ஆகிய முகவரிகளில் உள்ள ஊழியர் தங்கும் விடுதிகளில் மூன்று புதிய கிருமித்தொற்று குழுமங்களை சுகாதார அமைச்சு நேற்று அறிவித்தது.
மேலும் 6 ஊழியர் தங்கும் விடுதிகள் கொவிட்-19லிருந்து விடுவிக்கப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
அட்மிரல்டி ரோடு வெஸ்டில் இருக்கும் கோச்ரேன் லாட்ஜ் II, செனோக்கோ டிரைவில் இருக்கும் ஹியூலெட் தங்கும் விடுதி, ஷா ரோட்டில் இருக்கும் ஷா லாட்ஜ், தெம்பனிஸ் பிளேசில் இருக்கும் தெம்பனிஸ் தங்கும் விடுதி, எண் 31 சுங்கை காடுட் அவென்யூவில் இருக்கும் தங்கும் விடுதி, எண் 230 உட்லண்ட்ஸ் தொழிற்பேட்டையில் இருக்கும் E5 தங்கும் விடுதி ஆகியவை அவை.

