அறிகுறி இருந்தும் 40 விழுக்காட்டினர் சமூக ஈடுபாடு

அறிகுறி இருந்தும் 40 விழுக்காட்டினர் சமூக ஈடுபாடு

1 mins read
1d74d871-f9f7-4498-bf5f-e2ad1ebcfed7
-

சமூக அள­வி­லான கிரு­மிப் பர­வல் சம்­ப­வங்­களை ஆராய்ந்­த­தில் கொவிட்-19 உறுதி செய்­யப்­பட்­ட­வர்­களில் 40 விழுக்­காட்­டி­னர் நோய் அறி­கு­றி­க­ளின் ஆரம்­பக்­கட்­டத்­தில் இருந்­த­போதும் சமூக நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டது தெரிய வந்­த­தாக சுகா­தார அமைச்­சர் கான் கிம் யோங் தெரி­வித்­துள்­ளார்.

இது­போன்ற செயல்­கள் கொவிட்-19க்கு எதி­ரான முயற்­சி­க­ளுக்கு ஊறு விளை­விக்­கும் என்று எச்­ச­ரித்த அவர், உடல்­நிலை சரி­யில்­லா­விட்­டால் மருத்­து­வ­ரைக் காணு­மா­றும் மருத்­துவ விடுப்­பில் இருந்­தால் வீட்­டி­லேயே இருக்­கு­மா­றும் பொது­மக்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டார்.

கிரு­மித்­தொற்­றை முன்கூட்டியே கண்­டறிவதற்கான முயற்சிகளை அமைச்சு வேகப்படுத்தி இருப்பதாகவும் அதன் ஒரு பகுதியாக கண்காணிப்பு தீவிரமாகி இருப்பதாகவும் அமைச்சர் கான் குறிப்­பிட்­டார்.