வயது குறைந்தோருக்கு சிகரெட் விற்ற 10 கடைகள் பிடிபட்டன

வயது குறைந்தோருக்கு சிகரெட் விற்ற 10 கடைகள் பிடிபட்டன

2 mins read
af644f28-7561-43ad-91da-084a275a246e
படம்: சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் -

வயது குறைந்­த­வர்­க­ளுக்கு சிக­ரெட்­டு­களை விற்­ற­தாக புகை­யி­லைப் பொருட்­கள் விற்­கும் பத்து கடை­க­ளின் உரி­மம் தற்­கா­லி­க­மாக நீக்­கப்­பட்டு உள்­ளது.

இதனை நேற்று அறிக்கை மூலம் தெரி­வித்த சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் தனது அம­லாக்­கக் குழு­வி­ன­ரா­லும் கண்­கா­ணிப்பு மூல­மும் இவர்­கள் பிடிப்­பட்­ட­தா­கக் குறிப்­பிட்­டது.

தற்­கா­லிக உரி­மம் நீக்­கம் நடப்­பில் இருக்­கும் ஆறு மாதங்­க­ளுக்கு இந்­தக் கடைக்­கா­ரர்­கள் புகை­யி­லைப் பொருட்­களை விற்­கக்­கூ­டாது. பத்­துக் கடைக்­கா­ரர்­களில் ஆறு பேருக்கு $1,500 முதல் $2,000 வரை­யி­லான அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது. எஞ்­சி­ய­வர்­கள் மீதான புலன்­வி­சா­ரணை தொட­ரு­கிறது.

பிடி­பட்ட பத்து கடைக்­கா­ரர்­களும் வயது குறைந்­த­வர்­க­ளுக்கு சிக­ரெட் விற்ற குற்­றத்தை முதல்­முறை புரிந்­துள்­ள­தாகத் தெரிவிக்கப் பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இவ்­வாண்டு ஜூன் வரை­யில் கடை­க­ளின் உரி­மம் தற்­கா­லி­க­மாக நீக்­கப்­பட்­டது.

புகை­பி­டிக்­க­வும் புகை­யி­லைப் பொருட்­களை வைத்­தி­ருப்­ப­தற்­கும் சட்­டப்­ப­டி­யான குறைந்­த­பட்ச வயது 19லிருந்து 20ஆக இவ்­வாண்டு ஜன­வரி 1 முதல் உயர்த்­தப்­பட்­டது.

அடுத்த ஆண்டு ஜன­வரி 1 முதல் இது மேலும் ஓராண்டு உயர்த்­தப்­பட்டு குறைந்­த­பட்ச வயது 21 என்­றா­கும். புகை­யி­லைப் பொருள் உரி­ம­தா­ரர்­கள் தங்­க­ளது கடை­யில் புகை­யி­லைப் பொருட்­கள் தொடர்­பாக நடை­பெ­றும் எல்லா பரி­வர்த்­த­னை­க­ளுக்­கும் பொறுப்­பா­வார்­கள் என்­றும் கடை ஊழி­யர்­க­ளின் செயல்­களும் அவற்­றுள் அடங்­கும் என்று ஆணை­யம் குறிப்­பிட்டு உள்­ளது.

தோற்­றத்தை மட்­டும் வைத்து வயதை நிர்­ண­யிப்­பது சட்­டத்தை மீறிய இட­ரில் கடைக்­கார்­களை சிக்க வைத்­து­வி­டும் என்­றும் அது தெரி­வித்­தது.

ஆணை­யத்­தின் பட்­டி­யல்­படி, இவ்­வாண்­டில் இது­வரை ஏழு கடைக்­கா­ரர்­க­ளின் உரி­மம் பறிக்­கப்­பட்­டது அல்லது தற்­கா­லி­க­மாக உரிமம் நீக்­கப்­பட்­டது.