29,000 குறைந்த வருமான தொழிற்சங்க உறுப்பினர்களுக்குப் பயனளிக்கும் திட்டம்

29,000 குறைந்த வருமான தொழிற்சங்க உறுப்பினர்களுக்குப் பயனளிக்கும் திட்டம்

2 mins read
ddb12a9c-b480-442b-8808-4ee4cb6019a0
கோப்புப்படம்: எஸ்டி -

வேலை­ந­லன் சிறப்பு வழங்­கீடு குறித்த தக­வல் வெளி­யான அதே நேரம் இணை­யம் வழி பற்­றுச்­சீட்டு வழங்­கும் 'என்­டி­யுசி கேர்­ஃபண்ட் (இணைய பற்­றுச்­சீட்டு)' என்­னும் புதிய திட்­ட­மும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சில் (என்­டி­யுசி) உறுப்­பி­னர்­க­ளாக உள்ள சுமார் 29,000 குறைந்த வரு­மான சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­குப் பல­ன­ளிக்­கக்­கூ­டிய இத்­திட்­டம் மூலம் ஆண்­டுக்கு $6 மில்­லி­யன் உத­வி­கள் வழங்­கப்­படும்.

குறைந்த வரு­மா­னம் ஈட்­டும் தொழிற்­சங்க உறுப்­பி­னர்­கள் தங்­க­ளது அன்­றாட அத்­தி­யா­வ­சி­யத் தேவை­க­ளுக்­கும் தகு­தி­பெ­றும் கடை­களில் பள்­ளிக்­கூட சாத­னங்­களை வாங்­கிக்­கொள்­ள­வும் உத­வும் பொருட்டு $100 பெறு­வர். இத்­து­டன், தகுதி பெறும் பள்ளி செல்­லும் குழந்­தை­களும் $100 பெறு­வர்.

தொழிற்­சங்க உறுப்­பி­ன­ரும் அவ­ரைச் சார்ந்­தோ­ரும் ஒரே வீட்­டில் வசித்­தால் அந்­தக் குடும்­பத்­தின் ஒட்­டு­மொத்த மாத வரு­மா­னம் $3,400 அல்­லது அதற்­குக் கீழ் இருக்க வேண்­டும்.

அல்­லது குடும்­பத்­தில் உள்­ளோ­ரின் தனி­ந­பர் வரு­மா­னம் $850க்கு மிகா­மல் இருந்­தால் இந்த உத­விக்­குத் தகு­தி­பெ­று­வர்.

தங்­க­ளைச் சார்ந்­தோர் தங்­க­ளு­டன் வசிக்­காத நிலை­யில் தனி­ந­ப­ரின் மொத்த மாத வரு­மா­னம் $1,500 அல்­லது அதற்­குக் கீழ் இருக்க வேண்­டும்.

இதற்கு முன்­னர் கடந்த ஆண்­டில் என்­டி­யுசி-யு கேர் ஃபண்ட் பற்­றுச்­சீட்­டுத் திட்­டத்­தின் மூலம் பயன்­பெற்­றோர் புதிய திட்­டத்­திற்­குத் தாமா­கத் தகுதி பெறு­வர். அவர்­க­ளுக்­கான இணை­யப் பற்­றுச்­சீட்டு ஆகஸ்ட் இறு­தி­வாக்­கில் வழங்­கப்­படும்.

புதிய திட்­டத்­தின்­கீழ் வழங்­கப்­படும் உத­விக்­குத் தகுதி பெற்­றி­ருந்­தும் இதற்கு முன்­னர் பற்­றுச்­சீட்­டுத் திட்­டம் மூலம் பய­ன­டை­யா­தோர் 'என்­டி­யுசி கேர்­ஃபண்ட் (இணைய பற்­றுச்­சீட்டு)' திட்­டத்­திற்கு ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை www.ntuc.or.sg/ucare/apply என்­னும் இணைய முக­வ­ரி­யில் விண்­ணப்­பிக்­க­லாம்.