உற்பத்தித் துறை தொடர்ந்து சுருங்கியது; ஜூனில் 6.7% குறைவு

உற்பத்தித் துறை தொடர்ந்து சுருங்கியது; ஜூனில் 6.7% குறைவு

2 mins read
4311150d-fd8b-476f-a2fb-66e1f049aee8
உயிரியல் மருத்துவத்துறை உற்பத்தி மிக அதிகமாகக் குறைந்தது. இந்த அளவு 30.6% ஆக இருந்தது. கோப்புப்படம் -

சிங்­கப்­பூ­ரின் உற்பத்தித் துறை உற்­பத்தி தொடர்ந்து இரண்­டா­வது மாத­மாக கடந்த ஜூன் மாதத்­தி­லும் மந்தமாக இருந்தது. உயி­ரி­யல் மருத்­துவ தொழில்­துறை உற்­பத்தி மிக­வும் குறைந்­ததே இதற்­கான முக்­கிய கார­ண­மாக இருந்­தது.

பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கம் வெளி­யிட்ட புள்­ளி­வி­வ­ரங்­கள் மூலம் இந்த நில­வ­ரம் தெரி­ய­வ­ரு­கிறது. சென்ற ஆண்டு ஜூன் மாதத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில், இந்த ஆண்டு ஜூனில் உற்பத்தித் துறை உற்­பத்தி 6.7 விழுக்­காடு இறக்கம் கண்டது.

இந்த இறக்­கம், மே மாதம் 8.1% ஆக இருந்­தது.

ஆனால் உயி­ரி­யல் மருத்­து­வத் துறை­யின் உற்­பத்­தியை நீக்­கி­விட்டு பார்க்­கை­யில் உற்பத்தித் துறை 2.1 விழுக்­காடு வளர்ச்சி கண்டு இருக்­கிறது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

உயி­ரி­யல் மருத்­து­வத் துறை உற்­பத்தி 30.6 விழுக்­காடு குறைந்­துள்­ளது. கொவிட்-19 சூழ­லில் இந்­தத் துறை­யைச் சேர்ந்த தொழில்­நுட்­பப்பிரிவு 5.9 விழுக்­காடு வளர்ச்சி அடைந்­தது என்­றா­லும் மருந்து உற்பத்திப் பிரிவு 37.4 விழுக்­காடு சுருங்­கி­விட்­டது.

ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் பார்க்­கை­யில், சென்ற ஆண்டு இதே மாதத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் இந்த ஆண்டு ஜூனில் உயி­ரி­யல் மருத்­து­வத் துறை­யின் உற்­பத்தி 26.6% வளர்ச்சி கண்­டது.

அதேபோல் மின்­னணு தொழில்­துறை­யின் உற்­பத்தி 17.3 விழுக்­காடு கூடி­யது. இதற்கு கணி­னிச்­சில்லு உற்பத்தித் துறையே முக்­கிய கார­ண­மாக இருந்­தது. இந்­தத் துறை 26% விரி­வ­டைந்­தது.

இருந்­தா­லும் மின்­னணு தொழில்­து­றை­யின் இதர பிரி­வு­கள் சரி­யா­கச் செயல்­ப­ட­வில்லை. மொத்­தத்­தில் மின்­ன­ணுத் துறை­யின் உற்­பத்தி இந்த ஆண்­டின் முதல் பாதி­யில் 0.4 விழுக்­காடு குறைந்து இருக்­கிறது.

துல்­லியப் பொரு­ளி­யல் தொழில்­துறை 9.1 விழுக்­காடு விரி­வ­டைந்­தது. மொத்­தத்­தில் இந்­தத் துறை இந்த ஆண்­டின் முதல் ஆறு மாதத்­தில் 11.6 விழுக்­காடு வளர்ச்சி கண்­டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆயி­னும் ரசா­ய­னத் தொழில்­து­றை­யின் உற்­பத்தி ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் கடந்த ஜூன் மாதம் 12.1% குறைந்­தது.

2019 முதல் காலாண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் இந்த ஆண்­டின் முதல் பாதி­யில் ரசா­ய­னத் தொழில்­துறை 5.5 விழுக்­காடு வீழ்ச்சி கண்­டது. பொது உற்பத்தித் தொழில்­து­றை­யின் உற்­பத்­தி­யும் சென்ற மாதம் 13.9 விழுக்­காடு சுருங்­கியது. உணவு, பானம், சிக­ரெட், அச்சு உள்­ளிட்ட பல துறை­களும் இறக்­கம் கண்­டன.

போக்­கு­வ­ரத்துப் பொறி­யி­யல் துறை உற்­பத்தி கடந்த ஜூன் மாதம் 33.9 விழுக்­காடு சுருங்­கி­யது என்று பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கத்­தின் புள்­ளி­வி­வ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.